April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • கால் அகற்றம் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம் – காவேரி மருத்துவமனையில் அறிமுகம்
August 7, 2023

கால் அகற்றம் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம் – காவேரி மருத்துவமனையில் அறிமுகம்

By 0 231 Views

‘கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம்’

– ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் அறிமுகம்

டாக்டர். N. சேகர் அவர்களின் திறன் மற்றும் சிறப்பான நிபுணத்துவத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 200 வரையிலான கால் உறுப்புகள் அகற்றப்படாமல் காப்பாற்றப்படுகின்றன.

● விபத்து காயமும், நீரிழிவும் தான் கால் உறுப்பு அகற்றம் மிக பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

● 85% கால் உறுப்பு அகற்றல் நிகழ்வுகளுக்கு முன்னதாக காலில் புண்கள் உருவாவது நிகழ்கிறது. உரிய நேரத்தில் நோயறிதல் செய்யப்படுவதும் மற்றும் சரியான சிகிச்சை வழங்கப்படுவதும் கால் உறுப்பு அகற்றம் தவிர்க்கக்கூடும்.

சென்னை: 7 ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 06-ம் தேதியன்று உலக இரத்தநாள அறுவைசிகிச்சை தினம் அனுசரிக்கப்படும் நிகழ்வையொட்டி ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையும் மற்றும் டாக்டர். சேகர் ஃபவுண்டேஷனும் ஒருங்கிணைந்து “கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு” என்ற செயல்திட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நிகழ்ச்சியில் இறங்கியுள்ளன.

உலகளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு நபருக்கு பெரிய அளவிலான கால் உறுப்பு அகற்றம் செய்யப்படுகிறது. விபத்துக்காயம் மற்றும் நீரிழிவு ஆகியவையே கால் உறுப்பு அகற்றத்திற்கு மிகப் பொதுவான காரணங்களாக இருக்கின்றன. உலகளவில் நீரிழிவு நிலையத்தின் தலைநகரம் என்ற பெயருடன் 101 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களுள் 6-7% நபர்களுக்கு இரத்தநாள சிக்கல்கள் அவர்களது வாழ்நாள் காலத்தில் உருவாகின்றன.

மேலும், இந்தியர்கள் உயிர்வாழும் சராசரி காலஅளவு உயர்ந்திருக்கிறது; இதன் விளைவாக முதிர்ந்த வயதிலுள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வயது, நீரிழிவு மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் ஆகியவையே தமனிகளில் அடைப்புகள் உருவாவதற்கு மூன்று மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

புகைபோக்கியில் புகைக்கரி படிவதைப் போலவே தமனியின் சுவர்கள் மீது கொழுப்புப் பொருளும், கால்சியமும் படிப்படியாக படிந்து அதிகமாகி, தமனிகளை குறுகலாக்குகிறது. இதனால், இரத்தஓட்டம் குறையும் மற்றும் ஒரு காலகட்டத்தில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டு விடும். இதயத்திற்கு செல்லும் தமனியில் (கரோனரி) அடைப்பு ஏற்படுமானால், நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படும். இதேபோன்ற அடைப்பு காலில் ஏற்படுமானால், அந்நோயாளிக்கு சதை அழுகல் ஏற்படும் மற்றும் மூளையில் பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

“இரத்தநாள நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. பாதத்தின் இரத்தநாள தன்மையை சரிபார்க்காமல் நீரிழிவு நோயாளிகளுக்கு செய்யப்படும் சிறு அறுவைசிகிச்சையினால் பாதம் உட்பட, கால் போன்ற பல கால் சார்ந்த உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பாதம் உட்பட, கால் உறுப்புக்கு போதுமான அளவு இரத்தஓட்டம் இருப்பதை உறுதி செய்யாமல், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதத்தில் எந்த அறுவைசிகிச்சையும் செய்யக்கூடாது என்று அனைத்து மருத்துவர்களுக்கும் பல்வேறு தளங்களிலும் நாங்கள் வலியுறுத்தி கூறிவருகிறோம்.” என்று ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் இரத்தநாள அறுவைசிகிச்சை துறையின் தலைவரும் மற்றும் இந்தியாவில் இரத்தநாள அறுவைசிகிச்சையில் முன்னோடி என புகழ்பெற்றவருமான டாக்டர். N. சேகர் கூறுகிறார்.

கால் / பாத உறுப்பு அகற்ற நேர்வுகளில் 85% நபர்களுக்கு காலில் புண்கள் அதற்கு முன்னதாக வந்திருக்கும். பாதத்தில் ஒரு புண் உருவான உடனேயே தனது பாதம் வெட்டி அகற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நீரிழிவு நோயாளிக்கும் வந்து விடுகிறது. “அந்நேரத்தில் சரியான நோயறிதல் செய்யப்படுமானால் மற்றும் உரிய சிகிச்சை உடனடியாக வழங்கப்படுமானால், கால் உறுப்பு அகற்றத்தினை தவிர்க்க முடியும்.

இதற்கும் கூடுதலாக, ஒரு காலை இழக்கும் நபர்களுள் 30% பேருக்கு ஒரு ஆண்டுக்குள் அடுத்த காலிலும் இதே நோய் பாதிப்பு உருவாகிறது. ஆகவே, உறுப்புநீக்கலை தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்படுவது மிக முக்கியம். அதைப்போலவே, இரத்தத்திற்கு செல்லும் இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாக ஏற்படும் குருதியோட்டக்குறை பக்கவாதம் / ஸ்ட்ரோக்குகள் நிகழ்வதற்கு முன்னதாக ஒரு சிறிய எச்சரிக்கும் ஸ்ட்ரோக் (தற்காலிக, நிலையற்ற குறுதியோட்டக்குறை தாக்குதல்) பொதுவாக ஏற்படுகிறது.

இதுகுறித்து சரியான நோயறிதல் முடிவு செய்யப்படுமானால், இரத்த நாளத்திலுள்ள இந்த அடைப்பை அகற்றுவதன் மூலம் பெரிய அளவிலான பக்கவாத தாக்குதலை / ஸ்ட்ரோக்கை நிகழாமல் தடுக்க முடியும்.” என்கிறார் டாக்டர். N. சேகர்.

140 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஏறக்குறைய 350 இரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவர்களே இருக்கின்றனர். இந்தியாவில் ஏறக்குறைய 20 மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே தனியாக இரத்தநாள அறுவைசிகிச்சை துறைகள் இயங்குகின்றன.

இவைகளுள் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டில் இருக்கின்றன. இரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர்கள் தேவையை விட மிக குறைவாக இருப்பது, நாடெங்கிலும் பல மாநிலங்களில் கால் உறுப்பு அகற்றம் மிக அதிக அளவில் இருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். இரத்தநாள அறுவைசிகிச்சை என்ற சிறப்புப் பிரிவு இன்னும் வளர்ச்சியடைந்து வரும் பருவத்தில் தான் இருக்கிறது. குறிப்பிட்ட அளவிற்கு இத்துறை விரிவடைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும் கூட, மேல்நடைமுறை மற்றும் விழிப்புணர்வு ஆகிய அம்சங்களில் இத்துறை சென்றடைய வேண்டிய தூரம் மிக நீண்டதாகும்.

காவேரி மருத்துவமனை மற்றும் டாக்டர். N. சேகர் வாஸ்குலர் ஃபவுண்டேனும் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 200 வரையிலான கால் உறுப்புகள் அகற்றப்படாமல் சரியான சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படுகின்றன. திறந்தநிலை மற்றும் எண்டோவஸ்குலர் என்ற இரு முறைகளிலான அறுவைசிகிச்சைகளின் மூலம் இந்த அளவிற்கு கால் உறுப்புகள் அகற்றப்படாமல் தக்க வைக்கப்படுகின்றன. டாக்டர். N. சேகர் போன்ற மருத்துவ வல்லுனர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அனுபவம் மிக்க நிபுணத்துவத்தினால் இது சாத்தியமாகியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதன்மை செயலர் திரு. ககன்தீப் சிங் பேடி, இந்நிகழ்ச்சியின்போது உரையாற்றுகையில், “கால்களில் புண்கள் அல்லது சதை அழுகல் ஏற்படுவதற்கும் மற்றும் அதன் தொடர்ச்சியாக கால் உறுப்பு அகற்றலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது நீரிழிவே. உடற்பயிற்சி, சரியான உணவுமுறை மற்றும் புகையிலையை தவிர்ப்பது போன்ற அடிப்படை வாழ்க்கைமுறை திருத்தங்களை செய்வது, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

மாநில அரசின் முன்னெடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்தடுப்பு மருத்துவத்தில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துவருகிறோம். நீரிழிவு இருப்பதாக அல்லது நீரிழிவு வருவதற்கு சாத்தியம் இருப்பதாக நோயறிதலில் கண்டறியப்படும் நபர்களுக்கு மருத்துவரை சந்திக்குமாறும் மற்றும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. எனினும், இதில் அக்கறை காட்டாமல் அலட்சியம் செய்யப்படுமானால் அது இன்னும் அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இத்தகைய நோய் பாதிப்புகள் வராதவாறு தடுப்பது மீது விழிப்புணர்வும் மற்றும் இரத்தநாள சிறப்பு நிபுணரை உடனடியாக சந்தித்து சிகிச்சை பெறுவதும், பாதம், கால் அல்லது கை போன்ற உறுப்பு அகற்றல் செய்யப்படும் எண்ணிக்கையை குறைக்க உதவும்.

கால் உறுப்பு அகற்றலை தவிர்ப்பதை குறிக்கோளாகக் கொண்ட இந்த முன்னெடுப்பை மேற்கொள்வதற்காக டாக்டர். சேகர் மற்றும் காவேரி மருத்துவமனையை நான் மனமாரப் பாராட்டுகிறேன். இத்தகைய முன்னெடுப்புகள் மக்களின் வாழ்க்கை மீது ஆக்கபூர்வ தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.


“கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது சதையழுகல் மற்றும் கால் உறுப்பு அகற்றம் வழிவகுக்கும் இரத்தநாள அடைப்புகள் மிக பொதுவான சிக்கல்களுள் ஒன்றாக இருந்தன.

இரத்தநாள அறுவைசிகிச்சையில் முன்னோடி என புகழ்பெற்றிருக்கும் டாக்டர். சேகர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கி வரும் இரத்தநாள அறுவைசிகிச்சை துறை, 100-க்கும் அதிகமான நோயாளிகளிடம் கண்டறியப்பட்ட இரத்தநாள அடைப்புகளை அகற்றுவதற்கு ஓய்வின்றி தொடர்ந்து செயலாற்றி இதன் வழியாக இவர்களுக்கு கால் உறுப்பு அகற்றம் நிகழாமல் தடுத்திருக்கிறது. பாதங்கள் உட்பட, கால்கள் மற்றும் கைகள் போன்ற உடலுறுப்புகளை காப்பாற்றுவதில் காவேரி மருத்துவமனை தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இதன்மூலம் ‘கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு’ என்ற செயல்திட்ட இலக்கை எட்டுவதற்கு சிறந்த பங்களிப்பை இது வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் இரத்தநாள அறுவைசிகிச்சையில் உயர்சிறப்பு பயிற்சி திட்டத்தை நடத்துவதற்கு தேசிய மருத்துவ வாரியத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தனியார் துறையைச் சேர்ந்த ஒரே மருத்துவமனையாக காவேரி மருத்துவமனை திகழ்கிறது. இரத்தநாள அடைப்புகளை நீக்குவதற்கான அறுவைசிகிச்சை மூலம் உடலுறுப்புகளை பாதுகாக்க முடியும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்கும் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் இதை வலியுறுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

இத்தகைய விழிப்புணர்வின் மூலம் கால் உறுப்புகளை அகற்றாமல், காப்பாற்ற முடியும்; சிறப்பான வாழ்க்கைத் தரத்தோடு மக்கள் வாழ்க்கையை நடத்த உதவ இயலும் என்று காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் அதன் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.