January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தீபாவளிக் கொண்டாட்டமாக துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்..!’
May 4, 2025

தீபாவளிக் கொண்டாட்டமாக துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்..!’

By 0 146 Views

*துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!*

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.