June 30, 2026
  • June 30, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம் என்னதான் செய்கிறது..?

by on October 1, 2019 0

கே.பாக்யராஜைத் தலைவராகக் கொண்டுள்ளதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பெயர் அடிக்கடி முக்கியச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. காரணம், அவ்வப்போது எழும் கதைப் பஞ்சாயத்துகளில் நடுநிலைமையோடு அவர் பெற்றுத் தரும் நியாயங்கள். ஆனால், அந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றனவா..? “இல்லவே இல்லை…” என்கிறார் ‘அனிதா பத்மா பிருந்தா’ என்ற படத்தை இயக்கும் ஏ.எல்.சூர்யா.  இதே டைட்டிலில் இவர் பெற்ற சினிமா அனுபவங்களைத் தொகுத்து நூலாகவே வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் பரபரப்பாக விற்பனையும் ஆகி வருகிறது. அந்தக் […]

Read More

மார்பகமும் அங்கம்தான் கூச்சப்படாதீங்க – வரலஷ்மி வீடியோ

by on October 1, 2019 0

சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.    இதில் சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கருத்துகளை கூறினார்.    பின்னர் நடிகைவரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டியிலிருந்து…   “இந்த ஒரு மாதமாக மார்பக புற்று நோய் குறித்து விமான நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும். […]

Read More

ஈரத்துக்குப் பிறகு என் பெயர் சொல்லும் இரு துருவம் – நந்தா

by on October 1, 2019 0

சினிமாவுக்கு அடுத்ததாக கலையுலகின் எதிர்காலமாகக் கருதப்படும் வெப் சீரீஸ் தயாரிப்பில் இப்போது முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் பெருமளவில் அக்கறை காட்டி வருகின்றன. அந்த வரிசையில் ‘சோனி லிவ்’ (Sony LIV) மற்றும் ‘அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்’ இணைந்து வழங்கும் ‘இரு துருவம்’ வெப் சிரீஸின் அறிமுக விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது. அதில் சோனி பிக்சர்ஸ் இந்தியா டிஜிட்டல் பிரிவின் வர்த்தகத் தலைவர் உதய் சோதி, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா கூட்டாண்மைகள் தலைவர் அமோக் […]

Read More

விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி

by on September 30, 2019 0

விஜய் சேதுபதி போல் ஒரு நடிகர் கிடைத்தது தமிழ் ரசிகர்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்புதான் முக்கியம், நட்சத்திர அந்தஸ்து முக்கியமில்லை என்று உணர்ந்தும், நடந்தும் வருபவர். செல்வாக்குள்ள ஹீரோவாக வளர்ந்தும், பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வரும் வேளையிலேயே ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு வில்லனாகி அசத்தினார். இப்போது விஜய்யின் முறை. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக இருப்பவர் விஜய் சேதுபதியேதான். விஜய் 64 படத்தில் விஜய் […]

Read More

எம்ஜிஆர் மகன் படப்பிடிப்பு பொதுமக்களால் நிறுத்தம்

by on September 30, 2019 0

இரண்டு நாள்கள் முன்னர்தான் கார்த்தி நடிக்கும் சுல்தான் படப்பிடிப்பு திண்டுக்கல் கோட்டையில் வைத்து இந்து அமைப்புகளால் முற்றுகையிட்டு நிறுத்தப்பட்டது. இப்போது சசிகுமார் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு பொதுமக்கள் தலையீட்டால் போலீஸ் விசாரணைக்குள்ளாகி படப்பிடிப்புக்கு பயன்பட்ட ஆம்புலன்ஸ் சிறைபிடிக்கப்பட்டது. விஷயம் இதுதான். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது.இங்கே தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்குள்ள மருத்துவக்கல்லூரியில்தான் முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவம் […]

Read More

நெட்டில் கசிந்தது பிகில் டீஸர்தானா..?

by on September 29, 2019 0

ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப் பெண்ணே’, ‘வெறித்தனம்’ பாடல்கள் வெளியிடப்படும் முன்னரே நெட்டில் கசிந்துவிட, இன்று அதிக எதிர்பார்ப்பிலுள்ள ‘பிகில்’ டீஸர் கசிந்துவிட்டதாக சில டீஸர்கள் உலா வருகின்றன. முதல் விஷயம் அது படக்குழுவால் வெளியிடப்பட்ட டீஸர் போல் தெரியவில்லை. இரண்டாவதாக ஒரு டீஸருக்கும் இன்னொன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதுவே சொல்லிவிடும் இரண்டுமே உண்மையில்லை என்று. அத்துடன் விஜய் ரசிகர்களுக்காக இயங்கிவரும் ட்விட்டர் பக்கங்களும் இது ரசிகர்கள் ஆர்வமிகுதியால் செய்த வேலை என்று அறிவித்திருக்கின்றனர். சரி… ஏன் […]

Read More

கறிக்கடை உரிமையாளர்களை கூல் ஆக்கிய விஜய் ரசிகர்கள்

by on September 29, 2019 0

கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம். பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் கொதிப்படைந்திருந்த கறிக்கடை உரிமையாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒரு நூதனமான பணியை மேற்கொண்டனர். அதன்படி […]

Read More

பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு

by on September 28, 2019 0

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் […]

Read More