September 26, 2026
  • September 26, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

காதம்பரி திரைப்பட விமர்சனம்

by on March 19, 2021 0

ஹீரோ அருள் தனக்கு நெருக்கமானவர்களுடன் டாக்குமெண்டரி படமெடுக்க காட்டுப் பகுதிக்கு செல்ல, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாக, அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றில் வசிக்கும் வாய் பேச முடியாத பெரியவரிடம் உதவி கேட்டு தங்குகிறார்கள். அங்கே அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுமியை காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பித்தார்களா? […]

Read More

இயக்குனர் ஜனநாதன் இறந்த அதிர்ச்சியில் அவரது தங்கையும் மரணம்

by on March 18, 2021 0

லாபம் படத்தின் எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் எதிர்பாராமல் மூளைச்சாவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அடுத்த இரு தினங்களில் அவர் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணச் செய்தி கேட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த அவரது தங்கை லஷ்மி அண்ணனின் சடலத்தை பார்த்த இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணமடைந்தார். அண்ணனும் தங்கையும் […]

Read More

கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கக்கோரி வழக்கு

by on March 18, 2021 0

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் வி கிரியேஷன்சுக்காக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் கர்ணன். படத்தின் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை படத்திலிருந்து நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இந்த பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது. ஆனால் புல்லட் பிரபு […]

Read More

மகனுக்கு சுத்தத் தமிழ்ப் பெயர் வைத்த கார்த்தி

by on March 17, 2021 0

சிவகுமாரின் மகன்களான சூர்யா கார்த்தி இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் குழந்தைகளுக்கு தியா, தேவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறக்க அதற்கு சுத்த தமிழில் உமையாள் என்று பெயர் வைத்தனர். அதற்கு பின் நான்கு மாதங்களுக்கு முன் ரஞ்சனி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் […]

Read More

தொழில் அதிபர் ஆனார் நடிகை சஞ்சனா சிங்

by on March 17, 2021 0

ரேணிகுண்டா படத்தில் திறமையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். வித்தியாசமான முயற்சிக்கு பேர்போன நடிகை சஞ்சனா தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார்.  தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா.  யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை எதிரில் தொடங்கியுள்ளார்.  நேற்று நடந்த தொடக்க விழாவில் அனேக திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு சஞ்சனாவை வாழ்த்தினர்.  இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, […]

Read More

போலி இரிடியம் விற்பனை மோசடி புகாரில் இசையமைப்பாளர் அம்ரீஷ் கைது

by on March 16, 2021 0

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும் திரைப்பட இசையமப்பாளருமான அம்ரிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக  தெரிகிறது. சமீப காலமாகவே போலி இரிடியம் விற்பனையில் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. இந்த இரிடியத்தை வாங்குவதற்கு கோடிக்கணக்கான பணமும் கை மாறுவதாக தெரிகிறது. இது போன்றதொரு இரிடியம் விற்பனை மோசடியில் இசையமைப்பாளர் அம்ரீஷும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இவர் நானே என்னுள் இல்லை, மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, […]

Read More

விகடன் மீது போலீஸில் புகார் அளித்த தீதும் நன்றும் படக்குழு

by on March 16, 2021 0

விகடன் பத்திரிகை தங்கள் படத்தைத் தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி அவர்கள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது தீதும் நன்றும் படக் குழு. இது தொடர்பாக அவர்கள் அளித்த அறிக்கை… அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம், ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள். படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது […]

Read More

சேரனுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு

by on March 15, 2021 0

குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் […]

Read More

கமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு

by on March 14, 2021 0

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் கமல்ஹாசனின் கார் மீது ஏறி அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி சேதமடைந்தது. பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். […]

Read More