October 7, 2026
  • October 7, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரபல தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை
May 12, 2021

பிரபல தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

By 0 632 Views

மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி. 

இவரும் பிரபல தயாரிப்பாளர் ஆவார். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் என்ற பெயரில் பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறார். விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்தவர் இவர்தான்.

இவருக்கு இன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு அப்போது கண்டறியப்பட்ட ரத்த நாள அடைப்பு இன்று இரவு நடந்த ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சரி செய்யப்பட்டது.

இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். உடல்நிலை தேறியதும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.