ஒரு இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் மண் மனம் மாறாத ஒரு நெகிழ்ச்சிப் படைப்பு.
மதுரைக்குப் பக்கமிருக்கும் ஒரு கிராமத்தில் ஆற்றில் தண்ணீர் காணாமல போய் மணல் மேடுகளாக நிற்க, மணல் கொள்ளையர்கள் அங்கிருக்கும் நிலங்களை ஆக்கிரமித்து மணலைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி வாரிசில்லாமல் வாழும் வயதான கங்கை அமரன் – ரோஜா தம்பதியிடமும் அவர்கள் நிலத்தைத் தரச் சொல்லி மாபியாக்கள் தொல்லை கொடுக்க, அமரன் மசியாமல் இருக்கிறார். இது தொடர்பான பிரச்சினையில் அவர் வளர்க்கும் ஆடு பலியாக, நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேஷன் போனவரை அடித்து நொறுக்குகிறார் மாபியாக்களின் கையாளான போலீஸ் அதிகாரி பாசு வெங்கட்.
இன்னொரு பக்கம் புதிதாக போலீஸ் வேலையில் சேர்ந்த அப்பாவி நாயகன் தர்ஷனை அவரது மேலதிகாரிகள் கேவலமாக நடத்துகிறார்கள்.