July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ஜப்பான் திரைப்பட விமர்சனம்

by on November 11, 2023 0

தவறுகளால் தகவமைக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை இது. படம் முடியப் போகும் கடைசி நிமிடத்தில் கூட அவன் தன் தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை என்பது இந்த படத்தில் ஆச்சரியமான விஷயம். ஆனால் தவறு செய்தவனை தாய் கூட மன்னிக்க மாட்டாள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. இந்தச் செய்தியை தவறு செய்தவனின் பாதையிலேயே போய் நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன். படம் முழுவதும் தவறான மனிதனாகவே வருவதற்கு ஒரு ஹீரோவுக்கு மிகப்பெரிய தில் வேண்டும் அந்த […]

Read More

யுவனையே பாடலில் கட்டிப் போட்ட ஜோ படக் குழு..!

by on November 10, 2023 0

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் அறிமுகமாகி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் நடித்த ரியோ ராஜ் ஹீரோவாகும் புதிய படம் ‘ஜோ’. விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.அருளானந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கிறார். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், […]

Read More

எங்கள் டீமின் ஆவரேஜ் வயதே 29தான் – ஜிகிரி தோஸ்த் டீம் மீட் சுவாரஸ்யம்

by on November 9, 2023 0

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் ‘ஜிகிரி தோஸ்த் ‘ படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது நட்பை போற்றும் படம் என்று. இப்படத்தில் ஷாரிக் ஹாசன், அரன்.வி, அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, துரை சுதாகர், அனுபமா குமார், கெளதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அரன்.வி, இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் […]

Read More

துப்பாக்கி சத்தத்துக்கு மத்தியில் புல்லாங்குழல் இசைக்கும் கணேஷ் பாபு – வைரமுத்து

by on November 7, 2023 0

கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு  Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர்.  பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.  இவ்விழாவினில்… கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது… தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர் நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது?, […]

Read More

தீபாவளி பட்டாசு வெடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்

by on November 7, 2023 0

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. கனம் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. அதன்பேரில், வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் […]

Read More

வெற்றிமாறனை என் படத்தில் ஹீரோவாக்க ஆசை..! – அமீர்

by on November 6, 2023 0

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது.  சத்யா, சஞ்சிதா ஷெட்டி, […]

Read More

பருத்தி வீரனுக்குப் பிறகு வசனங்கள் மாஸாக இருப்பது ஜப்பானில்தான் – கார்த்தி கல கல

by on November 6, 2023 0

எண்ணிக்கை மட்டுமே முக்கியம் – அதன் மூலம் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பது மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல் நல்ல ரசனைக்கு வித்தாகம் படங்களில் மட்டுமே நடிக்கும் வழக்கம் உள்ள கார்த்திக்கு அவர் நடிப்பில் அடுத்த வெளியாக இருக்கும் ஜப்பான் அவரது 25வது படமாக அமைகிறது. தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அந்தப் படம் குறித்து கார்த்தியின் கலகலப்பான பேட்டி இது… படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? […]

Read More

என் போனில் மிஷ்கின் பெயர் ஓநாய் என்றுதான் இருக்கும் – இயக்குனர் பாலா

by on November 4, 2023 0

டெவில் திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இந்த […]

Read More

எதிர்மறைத் தன்மையை முன்வைத்து உருவாக்கப்பட்ட படம் ரெய்டு – விக்ரம் பிரபு

by on November 4, 2023 0

‘ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, “இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி […]

Read More

ரொமான்ஸ் மூடுக்கு பாரதியார் பாடல் – சில நொடிகளில் படச் செய்திகள்

by on November 4, 2023 0

தலைப்பைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகளில்’. இந்தப் படத்தில் இடம்பெறும் பாரதியாரின் ‘ஆசை முகம்…’ என்ற பாடலை இப்போது வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த பாடல் காட்சியில்தான் ரிச்சர்டும் யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள்.  முழுக்க முழுக்க […]

Read More