October 5, 2024
  • October 5, 2024
Breaking News
February 25, 2024

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் இப்போது சென்னை அண்ணா நகரில்…

By 0 316 Views

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் சென்னையில் அதன் 3வது மருத்துவமனையின் சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது…

சென்னை, பிப்ரவரி 25, 2024: குழந்தைகள், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவமனைகளின் சங்கிலியான ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் மற்றும் BirthRight by Rainbow Hospital, சென்னையில் தனது 3 வது மருத்துவமனையின் ஒரு சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது.

மருத்துவர்கள், நலம் விரும்பிகள், நோயாளிகள் இளம் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இந்த நட்சத்திர வசதியை சுற்றிப் பார்ப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

24 வருட பாரம்பரியத்துடன், இந்த புதிய வசதியானது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விதிவிலக்கான உடல்நல சேவைகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகின்ற குழுமத்தின் 19வது மருத்துவமனையை குறிக்கிறது.

இந்த குழுமம் தற்போது சென்னையில் கிண்டி மற்றும் சோழிங்கநல்லூரில் இரண்டு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. சமீபத்திய கூடுதலாக, அண்ணா நகரில் உள்ள 80 படுக்கைகள் கொண்ட ஒரு நவீன குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையானது,

சென்னையில் உள்ள ரெயின்போ இன் நெட்வொர்க்கில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு குறிப்பிடத்தக்க ஸ்போக் மருத்துவமனையாக செயல்படும். இந்த மருத்துவமனையானது, குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம், வெளிநோயாளர் சேவைகள் மற்றும் நிலை 3 புதிதாய்ப் பிறந்த குழந்தை மற்றும் குழந்தை தீவிர சிகிச்சை சேவைகள் ஆகியவற்றில் 24X7 ஆலோசகர் தலைமையிலான அவசர சிகிச்சை அடங்கிய முழுமையான குழந்தை மருத்துவ மற்றும் மகப்பேறியல் சேவைகளை வழங்கும். இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் இந்த மருத்துவமனை தனது செயல்பாடுகளை தொடங்க உள்ளது.

அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான ஆலோசகர்களின் கீழ் சிறந்த பராமரிப்பை வழங்கும் இந்த பெரிய தனிப்பயனாக கட்டமைக்கப்பட்ட மருத்துவமனை கிண்டியில் உள்ள தற்போதைய ஹப் மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகளை நிறைவு செய்யும். BirthRight, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துடன் கூடுதலாக ரெயின்போ இன் உடல்நலப் பராமரிப்புக்கான அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையை வலுப்படுத்துகின்ற கருவுறுதல் பராமரிப்பையும் வழங்கும். அதன் விதிவிலக்கான நோயாளி பராமரிப்புக்காக புகழ்பெற்ற ரெயின்போ சில்ட்ரன்’ஸ் ஹாஸ்பிடல், மேம்பட்ட கட்டமைப்பு மற்றும் 24 மணிநேர ஆலோசகர் தலைமையிலான சேவைகளைக் கொண்டுள்ளது.

இந்த குழுமத்தின் சமீபத்திய முயற்சியானது, சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியின் பெரிய மக்கள்தொகைக்கு உயர்தர உடல்நல சேவையை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரெயின்போ சில்ட்ரன்’ஸ் ஹாஸ்பிடல் இன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ரமேஷ் கஞ்சர்லா தனது உற்சாகத்தை வெளிப்படுத்திக் கூறுகையில், “சென்னையில் எங்கள் 3வது மருத்துவமனை திறக்கப்பட்டதன் மூலம், சென்னையில் வசிப்பவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த பிராண்ட் நெறிமுறைகளுக்கு ஏற்ப, குழந்தைகளை மையப்படுத்திய சூழல் மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் மனதிற்கிதமான உட்புறங்களுடன் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. பரந்த உள்ளடக்கம் மற்றும் சிறந்த அணுகலை வழங்க இந்த மருத்துவமனை எங்கள் ஹப் மற்றும் ஸ்போக் மாதிரியை மேலும் அதிகரிக்கும்.

தேவையின் அடிப்படையில், நகரத்தில் அதிகமான ஸ்போக்குகளை நாங்கள் திட்டமிடுவோம். அதிநவீன, இரக்கமுள்ள கவனிப்பை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு சீராக இருக்கிறது மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் மேலும் இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் செயல்பாடுகளை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.”என்றார்.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
ஊடக தொடர்பு தகவல்
ஆட் ஃபேக்ட்டர்ஸ் PR
DG ஜெய்ஷங்கர் | +9194440 36340 | dg.jaishankar@adfactorspr.com
வில்சன் பால் | +9191762 14141 | wilson.paul@adfactorspr.com

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் பற்றி:

1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் மருத்துவம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகளின் ஒரு முன்னணி சங்கிலியாகும்.

24 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்டு, ரெயின்போ அதன் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் நிபுணர் பராமரிப்பு மூலம் குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் BMT போன்ற மாற்று பராமரிப்பு சேவைகள் உட்பட விதிவிலக்கான உடல்நல சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

சுவாரஸ்யமாக, இந்த மருத்துவமனை குழுமம் பல்வேறு கரிம மற்றும் இயற்கையான மகளிர் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்களின் ஒரு வரம்பை பட்டர்ஃபிளை எசென்ஷியல்ஸ் என்ற பிராண்டின் கீழ் வழங்குகிறது.
அண்ணாநகரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த வசதி உட்பட நாடு முழுவதும் 19 மருத்துவமனைகள் மற்றும் 3 கிளினிக்குகளை இந்தக் குழுமம் நடத்தி வருகிறது. ஹைதராபாத்தில் ஒரு ஹப் மற்றும் 7 ஸ்போக்குகள், பெங்களூரில் ஒரு ஹப் மற்றும் 3 ஸ்போக்குகள் மற்றும் சென்னையில் ஒரு ஹப் மற்றும் 2 ஸ்போக்குகள் கொண்ட ஹப் மற்றும் ஸ்போக் மாதிரியில் இந்த குழுமம் செயல்படுகிறது.

இந்த மருத்துவமனை சங்கிலி ஒரு பிரத்யேக குழந்தை இருதய மையமான ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் ஐ ஹைதராபாத்தில் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.