March 28, 2024
  • March 28, 2024
Breaking News
December 14, 2018

அஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு

By 0 835 Views

ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் பாலிவுட்டில் வணிக ரீதியில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகண்டு 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார்.

அவரது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு பயணம் சூப்பர் டூப்பர் ‘ஹம் பாஞ்ச்’ தொடங்கி, உணர்ச்சிப்பூர்வமான ‘மாம்’ படம் வரை வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அவரது பயணம் பல தசாப்தங்களை, பல்வேறு வகையான திரைப்படங்களையும் கடந்து வெற்றிகரமான வந்துள்ளது. மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை கவர்ந்த, அவரின் ‘மிஸ்டர் இந்தியா’ என்ற ஃபேண்டஸி திரைப்படம் இன்றும் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது.

இப்போது அஜித் நடிக்க ‘பிங்க்’ படத்தை எச்.வினோத் இயக்கத்தில் தமிழில் தயாரிக்கிறார் போனிகபூர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.

போனிகபூரும், அஜித்தும் கைகோர்த்தது எப்படி..? அவரே சொல்கிறார்.

“இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.

இன்று படப்பிடிப்பை துவக்கி, 2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அஜீத்துடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

எச்.வினோத் இதற்கு இயக்குநர் ஆனதெப்படி..?

“இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பார்த்து வருகிறேன், சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்தான் தமிழ் மொழியில் ‘பிங்க்’ படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ‘ஜீ நிறுவனம்’ ஆதரவுடன் தயாராகின்றன.