December 9, 2023
  • December 9, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மாடு இல்லாமல் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் தந்த ஹீரோ
July 27, 2020

மாடு இல்லாமல் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் தந்த ஹீரோ

By 0 434 Views

தலைப்பைப் பார்த்துவிட்டு நம்ம தமிழ் ஹீரோ யாரோ ஒருவர்தான் இப்படி வாங்கி கொடுத்து விட்டாரோ என்று ஆச்சரியப்பட வேண்டாம். தமிழ் ஹீரோக்கள் சினிமாவில் தாராளம் செய்வதோடு சரி. நிஜ வாழ்க்கையில் செய்வதறியாதவர்கள்.

Sonu Sood donated tractor to Andhra farmer

Sonu Sood donated tractor to Andhra farmer

இந்த ஹீரோ இந்தி நடிகரான சோனு சூட். கொரோனா பிரச்சனையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெருமளவு உதவிய இவர் இப்போது இப்படி ஆந்திர விவசாயிக்கு உதவி இருக்கிறார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி மண்டலம் கே.வி.பள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு டிராக்டருக்கு வாடகை செலுத்த முடியாமல் தனது 2 மகள்களை வைத்து ஏர் உழுதார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.

இது குறித்து பாலிவுட் நடிகர் சோனுசூட் தனது டிவிட்டரில், வயலில் உழவு செய்தவதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிப்பதாகவும், தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார். ஆனால் உழவுமாடுகளுக்கு பதிலாக நடிகர் சோனு சூட், டிராக்டர் வாங்கி தந்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில், விவசாயிக்கு புதிய டிராக்டர் ஒன்றை அனுப்பிவைத்து உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ்வரராவின் குடும்பத்திற்கு டிராக்டரை அன்பளிப்பாக வழங்கி சிறந்த முயற்சியை எடுத்துள்ள சோனுஜியை தொடர்புகொண்டு பேசி பாராட்டினேன். இந்தக் குடும்பத்தின் நிலையை உணர்ந்து, இரண்டு மகள்களின் கல்விக்குப் பொறுப்பேற்று, அவர்களின் கனவு நனவாக உதவி செய்வேன் பதிவிட்டுள்ளார்.

நம்ம ஹீரோக்கள்… ஹும்..! கீழே சோனு சூட் மனம் நெகிழ வைத்த வீடியோ…