May 2, 2024
  • May 2, 2024
Breaking News

Monthly Archives: December 2020

ஈஸ்வரன் வெளியீட்டைத் தடுக்க நினைத்தால்… எச்சரிக்கிறார்கள்

by on December 31, 2020 0

ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை! அன்புடையீர் வணக்கம். ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து […]

Read More

ரஜினியின் அறிவிப்பு ஜோதிடர் ஷெல்வி தொழிலுக்கு ஆப்பு – வீடியோ

by on December 30, 2020 0

தற்போது தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி, டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்..! இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் […]

Read More

50வது சினிமா ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் கலைப்புலி தாணு

by on December 29, 2020 0

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி தாணு. இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 1971 ல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி […]

Read More

பழிதீர்த்த பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் – மனமுடைந்த இசை ஞானி

by on December 28, 2020 0

ஏறத்தாழ 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவின்  பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரைத்தான் இசையமைக்க பயன்படுத்தி வந்தார் இளையராஜா. இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற நேர்ந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த இளையராஜா, தான் 35 ஆண்டுகளாகப் பயன்படுத்திய அறையில் ஒரு மணி நேரம் தியானம் செய்யவும், அங்கேயிருக்கும் தன்னுடைய பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லவும் பிரசாத் நிர்வாகம் அனுமதிக்க உத்தரவிட […]

Read More

கமல்ஹாசன் அரசியலில் ஜீரோ – எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

by on December 28, 2020 0

தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கினார் அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான […]

Read More

அதிமுகவின் கொடிகாத்த அமைச்சர் ஜெயக்குமார்

by on December 27, 2020 0

அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்! எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்த நிலையில் காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு […]

Read More

பூமிக்கு கொடையாக மரம் நட்ட சியான்கள் டீம்

by on December 26, 2020 0

நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியான படங்களில ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஒருசேர பாராட்டப்பட்ட சியான்கள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே தியேட்டர்கள் தோறும் வெற்றியைக் கொண்டாடி வரும் சியான்கள் படத்தின் கதாநாயகன் கரிகால னும் மற்றும் அவரது குழுவும் அதன் ஒரு பகுதியாக மரம் நடு விழா ஒன்றில் கலந்து கொண்டனர். படத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களின்  பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் ராயல் சினிமா பிரபாகர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். […]

Read More

சியான்கள் திரைப்பட விமர்சனம்

by on December 25, 2020 0

சியான் என்றால் பெரிசு என்று பொருள். தமிழில் முதல் சியானாக விக்ரம் அறியப் பட்டாலும் அரிதாக நிஜ சியான்கள் பற்றியும் அவ்வப்போது படங்கள் வருவதுண்டு.   இதில் ஒரு சியான் அல்ல. ஏழு சியான்களைப் பற்றிய நெகிழ்வான கதை ஒன்றைச் சொல்லி சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.   தாதாக்கள் படங்களாக வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் இப்படி தாத்தாக்களை முக்கிய பாத்திரங்களாக ஆக்கி ரசிக்க வைத்திருக்கும் இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.   தேனி அருகே […]

Read More