August 3, 2026
  • August 3, 2026
Breaking News
December 26, 2020

பூமிக்கு கொடையாக மரம் நட்ட சியான்கள் டீம்

By 0 690 Views

நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியான படங்களில ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஒருசேர பாராட்டப்பட்ட சியான்கள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே தியேட்டர்கள் தோறும் வெற்றியைக் கொண்டாடி வரும் சியான்கள் படத்தின் கதாநாயகன் கரிகால னும் மற்றும் அவரது குழுவும் அதன் ஒரு பகுதியாக மரம் நடு விழா ஒன்றில் கலந்து கொண்டனர்.

படத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களின்  பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் ராயல் சினிமா பிரபாகர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி படத்தின் தயாரிப்பாளர் மற்றும், நாயகனும் ஆன கரிகாலன், படத்தின் இணைத் தயாரிப்பாளரான லில்லி கரிகாலன், படத்தின் ஏழு சியான்களுள் முக்கிய சியானான நளினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனர்.

அத்துடன் பட வெற்றியின் மகிழ்ச்சியை கேக் வெட்டிக் கொண்டாடி அந்தப் பகுதியிலுள்ள சிறுவர்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் திரைப்பட பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு மரங்களை நட்டனர்.