May 4, 2025
  • May 4, 2025
Breaking News
January 30, 2019

காற்றுள்ளபோதே வீட்டைக் கட்டிய யோகிபாபு

By 0 1642 Views

சென்னையில் குடியேறிய அனைவருக்குமே இங்கு ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டுமென்ற கனவு இருக்கும். அதில் சினிமாக் காரர்களின் கனவு கொஞ்சம் பிரமாண்டமாகவே இருக்கும்.

வடிவேலுவும், சந்தானமும் விட்ட கேப்பில் ‘மள மள’வென்று முன்னேறியவர்கள் சூரியும், யோகிபாபுவும். இதில் சூரி சொந்த வீட்டைக் கட்டிவிட்டார். அவரைவிட கொஞ்சம் பின்னால் வந்தாலும் யோகிபாபுவின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவில் முன்னேறியவர் வளர்ச்சிக்குத் தக்கவாறு சம்பளத்தையும் சமீபத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறாராம்.

yoagibabu house

yoagibabu house

இந்நிலையில் நேற்று அவர் தன் சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய புது மனையில் குடிபுகுந்திருக்கிறார். அவரை கணவர் கணேஷுடன் நேரில் சென்று வாழ்த்திய காமெடி நடிகை ஆர்த்தி இட்ட ட்வீட்டில்தான் இந்த விஷயமே வெளிவந்தது. தன் நண்பரை வாழ்த்தி அவர் இட்ட ட்வீட்டில் வீட்டின் படங்களும் அடங்கியிருக்கின்றன. 

வீட்டுக்கு அன்னையின் பெயரில் ‘விசாலாட்சி இல்லம்’ என்று வைத்திருக்கிறாராம்.

வீடு கட்டி ‘யோக பாபு’வான ‘யோகிபாபு’வை நாமும் வாழ்த்துவோம்..!