December 13, 2025
  • December 13, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம் (3.25/5)
December 1, 2025

ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம் (3.25/5)

By 0 49 Views

தலைப்பைப் பார்த்ததும் கீர்த்தி சுரேஷ் கையில் ஒரு ரிவால்வரை எடுத்துக்கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவார் என்றுதான் எதிர்பார்க்கிறோம். 

ஆனால் இது ஒரு டார்க் காமெடி வகையறா படம்.

எனவே கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாகத்தான் வருகிறார். அம்மா ராதிகா, அக்கா, தங்கை என்று நான்கு பெண்கள் மட்டுமே இருக்கும் குடும்பத்துக்குள் அழையா விருந்தாளியாக போதையில் உள்ளே நுழைந்த ரவுடி சூப்பர் சுப்பராயனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிர் தாக்குதல் புரியும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்து விடுகிறது. அதிலிருந்து இவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதுதான் கதை.

கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கும் அழகுக்கும் குறைவில்லை. ஒரு குடும்பத்தைத் தாங்கும் பெண்ணாக அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் சரியாகவே இருக்கிறது. 

அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் வரும் ஒவ்வொரு காட்சிகளும் கவனிக்க வைக்கிறார். விருந்தாளிக்கு வாங்கி வைத்த சமோசாவை “நீ கையை வைத்து விடாதே..!” என்று கீர்த்தி சுரேஷ் சொல்லியும் ஒரே ‘லபக்’ கில் அதை விழுங்கும் காட்சியை ரசிக்கலாம்.

இதற்கிடையில்… 

படா ரவுடி சூப்பர் சுப்பராயனைப் போட்டுத் தள்ள காத்திருக்கும் கல்யாண் அண்ட் கேங் ஒருபக்கம்…

ஒரே ஒரு வீடியோ மூலம் தன்னை அவமான படுத்திய கீர்த்தி சுரேஷை பழிவாங்க துடிக்கும் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் இன்னொரு பக்கம்…

இரவிலிருந்து காணாமல் போன தனது தந்தை சூப்பர் சுப்பராயனை தேடி அலையும் அவரது மகன் சுனில் மற்றொரு பக்கம்….

என்று இத்தனை ரவுடி பட்டாளங்களுக்கு இடையே வெற்றுப் பெண்களால் என்ன செய்ய முடிந்தது என்பது ரசனையான விஷயம்தான்.

இவர்கள் செய்கிற அராத்து வேலைகளுக்கு இடையே சுரேஷ் சக்ரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி போன்றவர்கள் செய்யும் காமெடியும் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.

ஷான் ரோல்டன் இசையும், தினேஷ் பி கிருஷ்ணன் ஒளிப்பதிவும் டார்க்கான படத்துக்கு பல வண்ணங்களை கொடுக்கிறது.

இயக்குனர் ஜே கே சந்துரு, என்ன எடுக்க நினைத்திருக்கிறாரோ அதை சரியாகவே எடுத்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் இழுவையாக அமைந்து விட்ட கிளைமாக்ஸில் தான் கொஞ்சம் நெளிய வேண்டி இருக்கிறது. 

ஆனாலும் நயன்தாராவுக்கு ஒரு கோலமாவு கோகிலா போல கீர்த்தி சுரேஷுக்கு இந்த படத்தை சொல்ல முடியும். 

ரிவால்வர் ரீட்டா – ஜாலியான தோட்டா..!

– வேணுஜி