உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது .
அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு .இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் கருதாது நேரம் காலம் பாராது ஈடுபட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மாஸ்க் வாங்கிக்கொடுத்து தங்களால் இயன்ற சமூக சேவையைக் தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்காக இப்பணியில் ஈடுபட்டு இயங்கிவரும் காவல்துறையினர், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என சென்னையில் 2000 பேருக்கு முகம் மூடும் ‘மாஸ்க்’ கொடுத்து தங்களால் இயன்ற பணியைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த பணி மேலும் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
பல வெற்றிப் படங்களில் நடித்தவரான யோகிபாபுவுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு சமூகப் பணி என்று இதைக் கூறலாம். இதற்காக அவரது ரசிகர்களைப் பாராட்டலாம்.