January 28, 2026
  • January 28, 2026
Breaking News
July 23, 2020

2021 வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்காதீங்க – உலக சுகாதார அமைப்பின் தலைவர்

By 0 763 Views

கொரோனா தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதை 2021ம் ஆண்டு வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் நியாயமான முறையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும்.

தடுப்பூசிகள் பலவும் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இதுவரை எதுவும் தோல்வி அடையவில்லை.

அடுத்த ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகப் பரவல் இருக்கும் பகுதிகளில் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் எச்சரிக்கை தேவை.

வைரஸ் பரவல் குறைத்த பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்..!” என்றார்.