January 15, 2025
  • January 15, 2025
Breaking News
December 27, 2018

விஸ்வாசம் படத்துக்குக் கிடைத்த புதிய பெருமை

By 0 965 Views

‘தல’ யாரிடமும் நெருங்கி வருகிறாரோ இல்லையோ பொங்கல் நெருங்க நெருங்க தல ரசிகர்களுக்கு வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ புத்துயிர் ஊட்டி வருகிறது. 

அதற்கேற்றாற்போல் தினம் தினம் புதுப்புது செய்திகளாக விஸ்வாசம் படத்தைப் பற்றி வெளியாகிக்கொண்டு அஜித் ரசிகர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டு இருக்கின்றன. 

இன்றைய லேட்டஸ்ட் தகவல் விஸ்வாசம் படத்துக்கு எந்த அஜித் படத்துக்கும் இல்லாத பெருமை கிடைத்திருப்பது. ஆமாம்… இதுவரை எந்தத் ‘தல’ படமும் வெளியாகாத ரஷ்யாவிலும், உக்ரேனிலும் விஸ்வாசம் வெளியாகவிருக்கிறது.

‘செவன்த் சென்ஸ் சினிமா’ இந்தச் சாதனையைச் செய்து காண்பித்திருக்கிறது. ரஷ்யாவில் மட்டும் எட்டுக்கு மேற்பட்ட நகரங்களில் வெளியாகவிருக்கிறதாம் ‘விஸ்வாசம்’.

ரஷ்யா, உக்ரேன் வாழ் ‘தல’ ரசிகர்களுக்கு இது சந்தோஷமான விஷயம் என்பதுடன் அங்கே ‘தல’க்கு புது ரசிகர்களும் உருவாக இது வழி கொடுக்கும்..!