April 20, 2024
  • April 20, 2024
Breaking News
November 22, 2019

விஜய் க்கு கன்னியாகுமரியில் சிலை

By 0 648 Views

விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் .

உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு இன்று மெழுகு சிலை
விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து
பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற முக்கியமான ஜாம்பவான்களான 20 சிலைகள் மட்டுமே உள்ளன . அதில் விஜய் அவர்களின் மெழுகு சிலையும் இணைத்துள்ளது .

தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது .

விஜயின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும் , ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர் .