January 23, 2026
  • January 23, 2026
Breaking News
April 15, 2020

விஜய் தேவரகொண்டா செய்த வித்தியாசமான செயல்

By 0 699 Views

கோலிவுட் ஹீரோகளில் ஒரு கை விரல்களில் உள்ள எண்ணிக்கையில் கூட அரசுக்கு நிவாரணத்தொகை கொடுக்க வில்லை என்பது தனி விஷயம்.. ஆனால் ஆளாளுக்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, அட்வைஸ் செய்து கடுப்பேற்றி வருகிறார்கள்.

தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. சில வருடங்களாக முன்னணி தெலுங்கு நடிகராக வலம் வரும் இவருக்கு ஆந்திரா முழுவதும் ரசிகர் ரசிகைகள் ஜாஸ்தி. பெண் ரசிகைகள் இவருக்கு மிகவும் அதிகம். இவர் நடிக்கும் படங்கள் பெருமபாலும் வெற்றி பெற்று வருவதால் தெலுங்கு சினிமாவில் செல்வாக்கு மிக்க நபராக இவர் வலம் வருகிறார்.

இப்பொழுது இந்த கோவிட் 19க்கு எதிரான லாக் டவுனில் இரவு பகல் பாராது மக்களை வழி நடத்தி தொடர்ந்து உழைத்து வரும் போலீஸ் அதிகாரிகளை மகிழ்விப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளை ஆன் லைனில் கலந்து உரையாடினார்.

பொது ஜனங்கள் நடமாட்டத்தைக் கட்டுபடுத்தி, உதவியும் செய்து வரும் அவர்களின் மனச்சுமையை போக்கும் விதமாகவும் கோவிட் 19 குறித்தும் விஜய் தேவரகொண்டா இன்று  கமிஷனர் ஆபீஸ் வந்து வீடியோ சாட் செய்து அசத்தினார்.

இப்படியாவது உருப்படியாக செய்யலாம் நம் ஹீரோக்கள்…?!