April 17, 2021
  • April 17, 2021
Breaking News

Tag Archives

தமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி

by on November 28, 2020 0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது நிறைவேறி விட்டதாம். இந்தாண்டு மார்ச் மாதத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “கப்பேல்ல”.இதில் அன்னா பென் , […]

Read More

49 வயதில் திடீர் திருமணம் செய்த முன்னணி தயாரிப்பாளர்

by on May 11, 2020 0

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் தமிழின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், அட்லி படங்களை தெலுங்கில் டப் செய்தும் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் தில்ராஜூவுக்கும், தேஜஸ்வினி என்பவருக்கும் நேற்றிரவு நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் இருக்கும் வெங்கடேஷ்வரா கோயிலில் திருமணம் நடந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..? ஆச்சரியம் இருக்கத்தான் செய்கிறது. 49 வயதாகும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு இயற்கை எய்தினார். பிறகு, […]

Read More

சாய் பல்லவியை கௌரவப்படுத்திய தெலுங்கு படவுலகம்

by on May 9, 2020 0

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி ‘ சாய் பல்லவி.’ இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்‌ஷித் ஆகியோரது டான்ஸ் வீடியோக்களை கண்டு டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், முறையாக டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இதற்கும் இவர் வெறும் […]

Read More

அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோக்களை விளாசும் டான்ஸ் மாஸ்டர் வைரல் வீடியோ

by on April 17, 2020 0

கொரோனா லாக்டவுன் அறிவிக்கப் பட்ட உடனேயே முன்வந்து அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோ க்களையே சவுக்கெடுக்காமல் விளாசி தள்ளி இருக்கிறார் ஆந்திர சினிமாவில் 40 ஆண்டுகாலம் நடிக நடிகையரை ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டர் ராகேஷ். தெலுங்கு ஹீரோக்கள் மொத்தமாக சுமார் 25 கோடிக்கு மேல் பிரதமர், முதமைச்சர் நிதிக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகுக்கும் உதவி இருக்கிறார்கள். அதற்குப்பின் வந்தாலும் பாலிவுட் ஹீரோக்கள் வாரிக் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தெலுங்கு நடிகர்களின் உதவி ஒன்றும் […]

Read More

விஜய் தேவரகொண்டா செய்த வித்தியாசமான செயல்

by on April 15, 2020 0

கோலிவுட் ஹீரோகளில் ஒரு கை விரல்களில் உள்ள எண்ணிக்கையில் கூட அரசுக்கு நிவாரணத்தொகை கொடுக்க வில்லை என்பது தனி விஷயம்.. ஆனால் ஆளாளுக்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, அட்வைஸ் செய்து கடுப்பேற்றி வருகிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. சில வருடங்களாக முன்னணி தெலுங்கு நடிகராக வலம் வரும் இவருக்கு ஆந்திரா முழுவதும் ரசிகர் ரசிகைகள் ஜாஸ்தி. பெண் ரசிகைகள் இவருக்கு மிகவும் அதிகம். இவர் நடிக்கும் படங்கள் பெருமபாலும் வெற்றி பெற்று வருவதால் […]

Read More