December 12, 2024
  • December 12, 2024
Breaking News
May 9, 2020

சாய் பல்லவியை கௌரவப்படுத்திய தெலுங்கு படவுலகம்

By 0 556 Views

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி ‘ சாய் பல்லவி.’

இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார்.

இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்‌ஷித் ஆகியோரது டான்ஸ் வீடியோக்களை கண்டு டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், முறையாக டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

இதற்கும் இவர் வெறும் நடிகையாக மட்டுமே ஆசைப்பட்டவர் இல்லை. மருத்துவப் படிப்பை குறிக்கோளாக வைத்து படித்து முடித்த இவர் இன்று பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இது போன்ற மாற்றங்களை தந்து நமக்கு பிடித்தால் எந்த துறைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதற்கு முயற்சி மட்டும் போதுமென்று எல்லோருக்கும் புரிய வைத்துள்ளார்.

இதே போன்று தெலுங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘ தி அல்டிமேட் டான்ஸ் ஷோ ‘ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஓணம் பண்டிகையால் ஈர்க்கப்பட்ட சாய் பல்லவி, பூக்களால் ரங்கோலி வரையவும் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் அவர் கேரளாவைச் சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சாய் பல்லவி இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதில் தெலுங்கு படவுலகம் முந்திக்கொண்டு அவர் இப்போது ராணாவுடன் நடித்துவரும் ‘ விராட்ட பர்வம் ‘ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டரை அதுவும் சாய் பல்லவியை மட்டுமே முன்னிலைப்படுத்தி வெளியிட்டு கௌரவம் சேர்த்திருக்கிறது.

நாமும் வாழ்த்துவோம். ” லாங் லிவ் சாய் பல்லவி..! ”

Viraattaparvam

Viraattaparvam first look