சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வரும் வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது கீழணை தண்ணீர் இன்றி வறண்டதால் கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.
வீராணம் ஏரி அமைந்துள்ள லால்பேட்டையில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய நிலையில் 42.92 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் மட்டுமே ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
“ஏரி நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 39 அடியாக இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்பிவைக்க முடியும். தற்போது 42.92 அடி நீர்மட்டம் மட்டுமே இருப்பதால் சென்னைக்கு 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் அனுப்பமுடியும்..!” என்று அதிகாரி ஒருவர் என்று கூறினார்.