October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
August 16, 2018

வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

By 0 1095 Views

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு முதலில் வாஜ்பாய் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த புதுதில்லி வந்த வண்ணம் உள்ளனர்.

பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக நாளை காலை வாஜ்பாயின் புகழுடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

மறைந்த ஓப்பற்ற தலைவருக்கு ஜிதமிழ்நியூஸும் அஞ்சலி செலுத்துகிறது..!