மதுரையில் ‘நியூட்ரினோ’ திட்டத்துக்கு எதிரான நடைப்பயணம் வைகோ தலைமையில் நேற்று துவங்கியது.
அந்தப் பயணத்தை தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். அப்போது வைகோ பேசியதிலிருந்து-
“நியூட்ரினோ’ திட்டத்துக்காக தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் கடும் பாறையை தகர்த்து காந்தக்கல் வைக்க 1,000 டன் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தவுள்ளன. இது நிறைவேறினால் முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணை உடையும். தமிழகம் பாலைவனமாகும்.
இத்திட்டம் நிறைவேற மக்கள் கருத்து தேவையில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தரவில்லை. ஆனால், அனுமதி பெற்று திட்டத்தை துவக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
இதற்கு அனுமதி வழங்கினால் முதல்வர், துணை முதல்வர் எங்கும் நடமாட முடியாதபடி 10 லட்சம் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்..!”