June 20, 2026
  • June 20, 2026
Breaking News
August 3, 2019

விஜய் சேதுபதி பார்த்திபன் இணையும் துக்ளக் தர்பார் தொடங்கியது

By 0 1061 Views

‘துக்ளக் தர்பார்’ – இது விஜய் சேதுபதி நாயகனாகும் படம். தயாரிப்பாளர் லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வயகாம் 18 ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் து..

இதில் விஜய்சேதுபதியுடன் ‘அதிதி ராவ் ஹைதாரி’ நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கலக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர் 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். இவர் இப்படத்தின் ஒளிப்பதிவை ஏற்கிறார் என்பது கூடுதல் தகவல். இந்தக் கூட்டணியில் கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார்.

திரைத்துறையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னையில் தொடங்கியது. பூஜையில் விஜய்சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் வயகாம் அனுப், விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா சதிஷ் மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சீயான் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தையும் மேலும் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tughlaq Durbar Inauguration

Tughlaq Durbar Inauguration