January 18, 2025
  • January 18, 2025
Breaking News
January 18, 2025

முதல்வர் வெளியிட்ட ‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

By 0 15 Views

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார்.

வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக நடித்துள்ள தனலட்சுமி, ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் சகாய் முதலியோர் பங்கு பெற்றனர்.

பாடலை முதல்வர் கண்டு பாராட்டினார்.