April 16, 2024
  • April 16, 2024
Breaking News

Tag Archives

வலிமை படத்துக்காக ஜீ5 செய்த பிரமாண்ட இந்திய சாதனை

by on March 22, 2022 0

அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உட்ச பட்ச சாதனை ஆகும். தமிழ் ஓடிடி இயங்குதளங்களில் மறுக்கமுடியாத வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் […]

Read More

அஜித் ரசிகர்களால் கல்லூரி கட்டணம் கட்டப்பெற்ற ஏழை மாணவி..!

by on February 28, 2022 0

அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’, தமிழ்நாடு முழுவதும் 24-ம் தேதி வெளியாகி வசூலில் முன்னிலை வகிக்கிறது. அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் சூழலில் தூங்காநகரமான மதுரை மேலுரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் கல்லூரி படிக்கும் ஏழை மாணவி ஒருவருக்கு காலேஜ் கட்டணம் கட்டி உதவி இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் வலிமை படத்துக்காக கட்டவுட் நிறுத்துவதற்காக சேர்த்து வைத்த தொகையை வைத்துதான் இந்த கட்டணத்தை கட்டி இருக்கிறார்கள் என்பது சிறப்பான செய்தி. இது குறிச்சு அன்பின் அதிபதி […]

Read More

வலிமை திரைப்பட விமர்சனம்

by on February 24, 2022 0

உலகமெல்லாம் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ட்ரீட்டாக வந்திருக்கும் படம். ஆனால் அஜீத்துக்கு ஆக்‌ஷனைக் காட்டிலும் சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்பதால் அதையும் கலந்து ஒரு கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படம் அந்த அளவுக்குப் பின்னியிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.   வலிமையாக வாழ்ந்தால் நாம் குற்றமே செய்தாலும் தவறாகாது என்று நினைக்கும் வில்லன், அவனைக் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டுமானால் அவனை விட வலிமை பொருந்தி […]

Read More

தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அஜித் குமார்தான் – போனி கபூர் புகழாரம்

by on February 20, 2022 0

உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுதுமே ‘வலிமை’ படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. அஜீத்குமாரின் கண்கவர் திரை ஆளுமை, உயர் தொழில்நுட்பம், மற்றும் காட்சி துணுக்களில் இருந்த அதிரடி […]

Read More

ரசிகர்களுடன் வலிமை பார்க்க பிரான்ஸ் செல்லும் ஜான்வி கபூர்

by on February 17, 2022 0

உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரிஸின் Le Grand Rex தியேட்டரில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம்  Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது. 2800 இருக்கைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது பிரான்ஸ் வாழ் இந்தியர்களை குஷிப்படுத்தி உள்ளது. இந்த தகவலை நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் அறிவித்து விரைவில் அஜித் சார் ரசிகர்களையும், பிரான்ஸ் மக்களையும் சந்திக்க உள்ளதாக […]

Read More

அஜித்தின் பில்லா மீண்டும் ரிலீஸ் – வலிமை அப்டேட்ஸ் கேட்பதை தடுக்கும் முயற்சியா?

by on February 21, 2021 0

அஜித் நடித்துவரும் ‘ வலிமை ‘ படம் பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருப்பதில் அதிருப்தியடைந்த ரசிகர்கள் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட்ஸ் கேட்டு வருகிறார்கள் இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முதல்வர் தொடங்கி பிரதமர் வரை கண்ணில்படும் எல்லோரிடமும் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அஜித்தும் தன் தரப்பு நியாயத்தை ரசிகர்களிடம் விளக்கி ஒரு அறிக்கையாக வெளியிட்டார். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு […]

Read More

புத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் – மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ்

by on January 7, 2021 0

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கச் சென்றுள்ளனர். புத்தாண்டு அன்று கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளது ‘வலிமை’ படக்குழு. டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டை […]

Read More
  • 1
  • 2