April 24, 2024
  • April 24, 2024
Breaking News

Tag Archives

தமிழகத்தில் கொரோனா குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தது – முதல்வர்

by on November 19, 2020 0

சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வனவாசி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி விடுதி கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் பல்வேறு […]

Read More

முதல்வன் பட பாணியில் துரித நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்

by on November 11, 2020 0

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண்ணிற்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில், மாற்றுத்திறனாளியான தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம் காவல் நிலையம் அருகே வைத்து மனு ஒன்றை கொடுத்தார். அதை வாங்கிய முதல்வர் அந்த பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு சொன்னார். இதனை அடுத்து அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு தமிழக முதல்வர் உடனடியாக பணி ஆணை தயார் செய்து […]

Read More

இ பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்று அறிய முடியும் – முதல்வர்

by on August 27, 2020 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் கடலூரில் 9 ,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன..! […]

Read More

தமிழ்நாட்டுக்குள் செல்ல விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் – முதல்வர் உத்தரவு

by on August 14, 2020 0

முக்கியப் பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறும் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. […]

Read More

சென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

by on July 4, 2020 0

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஜூலை 6 முதல் என்ன வகையிலான தளர்வுகள் சென்னைக்கு இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க […]

Read More

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்

by on April 10, 2020 0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர்களும் […]

Read More

20 நாள்களில் வெங்காய விலை குறையும் – முதல்வர்

by on December 9, 2019 0

தமிழகம் முழுக்க வெங்காயத்தில் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் நேற்றிரவு (டிச.8) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது. மழைக்காலம் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வரவேண்டிய சூழல் இருக்கிறது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்தது.  தமிழகத்தில் வெங்காயம் விளைச்சல் நன்றாக […]

Read More

ஆவின் பால் விலை விரைவில் உயர்கிறது

by on August 2, 2019 0

பொது மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாலை விற்பனை செய்யும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் விலையை கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன்பின் ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளதாகவும், தீவனம் விலை அதிகரித்துள்ளதால் மாடுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் […]

Read More

பொள்ளாச்சி மாணவி விவகாரம் – முதல்வரிடம் கமல் எழுப்பும் கேள்விகள் வீடியோ

by on March 15, 2019 0

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மனசாட்சி உள்ள பலரும் பல தளங்களில் தங்கள் அதிர்ச்சியைப் பதிவு செய்து வருகிறார்கள். இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரிடம் அது தொடர்பான கேள்விகளை எழுபியிருக்கிறார். அந்த வீடியோ கீழே… pic.twitter.com/5OczRUkhbj — Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2019

Read More