January 28, 2022
  • January 28, 2022
Breaking News

Tag Archives

தம்பி உதயநிதி தங்கை நித்யா மேனன் தேவதை ரேணுகா – மிஷ்கின்

by on February 2, 2020 0

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.   உதயநிதிஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான  இப்படம் வெற்றி அடைந்ததாக நன்றி சொல்ல பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.   இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது…   பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. […]

Read More

சைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்

by on January 20, 2020 0

இப்போதெல்லாம் நல்ல டைரக்டர் என்று படமெடுக்க ரொம்ப மூளையைக் கசக்க வேண்டாம். ஏதோ ஒரு கதையை அல்லது வேற்று மொழிப்படத்தை அப்படியே சுட்டு எடுத்தால் நீங்கள் நல்ல இயக்குநர். அப்படித்தான் பல இயக்குநர்கள் இப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அதில் ஒருவர் மிஷ்கின். சுட்டாலும் சுவையாக சுடுவதால் முன்னிலை இயக்குநராக அறியப்படுகிறார். போகிற இடத்திலெல்லாம் “நிறைய படியுங்கள். படங்களைப் பார்த்து படமெடுக்காதீர்கள்…” என்று அட்வைஸை அவிழ்த்து விட்டு விட்டு அவர் மட்டும் கொரிய, ஜப்பானிய படங்களை சுட்டே […]

Read More

சண்முகராஜா என்கிற மிஷ்கின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயுமா?

by on January 17, 2020 0

ஒரு வகையில் போலீஸ், கோர்ட் இவையெல்லாம் இல்லாவிட்டால் நம் ஆட்கள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்வார்களோ என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ஆனாலும், கோர்ட் உத்தரவைக் கூட துச்சமாக மதிக்கும் பேர்வழிகளுக்கு இப்போதும் குறைவில்லை. சில தினங்களுக்கு முன் இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம் தயாரிக்கச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு படமும் ஆரம்பிக்காமல் பணத்தைத் திருப்பியும் தராமல், படமெடுப்பதாக சொன்ன அதே […]

Read More

சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு

by on January 11, 2020 0

முதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள். அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது அப்பாவான ரகுநந்தனையே புரட்யூசராக்கி அதன் அட்வான்ஸாக ஒரு கோடி ரூபாயையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார். ஆனால், படம் ஆரம்பித்தபாடில்லை. அவருக்கு போன் போட்டபோதெல்லாம் “ஏவ்…” என்று சத்தம் மட்டும் […]

Read More

பல இந்திய மொழிகளில் சைக்கோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

by on December 21, 2019 0

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் ‘சைக்கோ’ படம் எதிர்பார்ப்புக்குரிய  படமாக உருவாகியுள்ளது. சென்சார் போர்ட் ‘சைக்கோ’ படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.   உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் ‘சைக்கோ’ படம் வெளியாவதாக அறிவித்துள்ளார். படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…. “இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக […]

Read More

மிஷ்கின் சைக்கோவை எனக்காக உருவாக்கி என்னை ஏமாற்றி விட்டார் – மைத்ரேயா

by on October 1, 2018 0

இயக்குனர் மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் தனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கீழே… இதற்கு மிஷ்கினின் விளக்கம் என்ன என்பது பொறுத்திருந்தால் தெரியும்.!  

Read More