March 19, 2024
  • March 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு
January 11, 2020

சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு

By 0 922 Views

முதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள்.

அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது அப்பாவான ரகுநந்தனையே புரட்யூசராக்கி அதன் அட்வான்ஸாக ஒரு கோடி ரூபாயையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார். ஆனால், படம் ஆரம்பித்தபாடில்லை. அவருக்கு போன் போட்டபோதெல்லாம் “ஏவ்…” என்று சத்தம் மட்டும் கேட்டு போன் ஆஃப் செய்யப்பட்டதாம்.

ஆனால், இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து ‘டபுள் மீனிங்’ புரடக்‌ஷனுக்கு ‘சைக்கோ’ படத்தை இயக்கித்தர ஒத்துக்கொண்டு அங்கும் மீட்டரைப் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டார் மிஷ்கின். இதே சைக்கோ கதையைதான் மேற்படி ரகுநந்தனிடமும் சொல்லியிருக்கிறார் அவர் என்பதுதான் ஹைலைட்.

ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா போனால் போகட்டும் என்று விட்டுவிட்டுப் போக..? எனவே கோர்ட்டுக்குப் போனார் ரகுநந்தன். எங்களுக்கு தொகையைத் திருப்பித் தராமல் படத்தை ஷூட் செய்யக்கூடாதென்று அவர் கோரிக்கை வைக்க, சைக்கோ ஷூட் நிறுத்தப்பட்டது.

மிஷ்கினைத் தயாரிப்பு தரப்பு நெருக்க, தானே முன்வந்து ரகுநந்தனிடம் மத்தியஸ்தம் பேசிய மிஷ்கின் அக்டோபர் மாதம் 50 லட்சம், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தலா 25 லட்சம் என்று தந்து விடுவதாகக் கூறியிருக்கிறார். மீண்டும் ஷூட் தொடங்க, அக்டோபர் மாதம் பணம் தரப்படவில்லையாம். மீண்டும் கோர்ட். நிறுத்து ஷூட்டிங்கை என்று சொல்ல உடனே உள்ளே வந்த மிஷ்கின் 50 லட்சத்துக்கு செக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், அதற்கு மேல் நவம்பர், டிசம்பரில் பேச்சு மூச்சில்லை. மீண்டும் நீதிமன்றத்திடம் போனார் ரகுநந்தன். அங்கே சைக்கோ தயாரிப்பாளர்கள் உள்ளே வந்து இயக்குநர் செய்த தவறுக்கு நாங்கள் இன்வெஸ்ட் செய்த படத்தை நிறுத்திக் கொண்டிருந்தால் பாதிப்பு எங்களுக்குதான் என்று தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல, அப்படியானால், மிஷ்கின் சம்பளத்தில் பாக்கி இருந்தால் அதைப் பிடித்து கோர்ட்டில் கட்டச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறதாம்.

இந்த விஷயத்தில் நொந்து போன தயாரிப்பு தரப்பு, இயக்குநரைத் திட்ட வழியில்லாமல் அட்டெண்டர், வாட்ச்மேனை எல்லாம் ‘டபுள் மீனிங்கி’ல் திட்டி கோபத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறதாம்.

இந்த மாதத்தில் ‘சைக்கோ’ வெளியாக இருக்க, அதற்குள் என்னென்ன பிரச்சினைகள் அரங்கேறப் போகின்றனவோ..?