June 21, 2026
  • June 21, 2026
Breaking News

Tag Archives

பா.இரஞ்சித் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பும் மகிழ்ச்சி பாடல் வீடியோ

by on January 24, 2019 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குவது தெரிந்த விஷயம்தானே..? சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் ‘குண்டு’ படத்தையும் தயாரித்து வருகிறார் . இந்நிலையில் தனது ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார். நடன இயக்குனர் ‘சாண்டி’யின் நடனத்தில் ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது, ‘மகிழ்ச்சி’ என்று துவங்கும் இந்த […]

Read More

பா.இரஞ்சித் களமிறக்கும் இரண்டாவது குண்டு

by on December 8, 2018 0

இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு தன் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றித் திரைப்படமாக அமைந்ததி ல் மட்டற்ற மகிழ்ச்சி. விமர்சகர்களும் கொண்டாடிய அந்தப் படத்தைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸின் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறார் பா.இரஞ்சித். தலைப்பே மிரட்டலாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ‘அதியன் ஆதிரை’ என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக […]

Read More

உதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை

by on October 22, 2018 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள் பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.   இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி,   […]

Read More

வாசித்தால்தான் எழுத்துக்கு கற்பனை செய்ய முடியும் -கூகை நூலகத் திறப்பில் பா.இரஞ்சித்

by on October 5, 2018 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு அந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை ‘சாய்ரட்’ பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைக்க இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் […]

Read More

கடைசிவரை பா.ரஞ்சித் அண்ணா கூடவே இருப்பேன் – மாரி செல்வராஜ்

by on October 4, 2018 0

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக ‘பரியேறும் பெருமள்’ படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் […]

Read More

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம்

by on September 28, 2018 0

மின்விசிறிக் காற்றுக்கும், பதனம் செய்யப்பட்ட குளிருக்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் உடல் கூட ஜன்னலோரம் எப்போதோ வீசும் இயற்கைக் காற்று பட்டதும் சிலிர்க்கிறது அல்லவா..? வெள்ளித்திரையிலும் அதுபோன்ற ஒரு அனுபவம் எப்போதாவதுதான் நேரும். அப்படியான ஒரு சிலிர்ப்புதான் இந்தப்படம். ஆதிக்க மனிதர்களின் சுயநல வக்கிரத்தால் பின்தங்கிவிட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் கல்வி, காதல், தேடல், வழிகாட்டல் என்று வாழ்வின் சகல தேவைகளுக்கும் எப்படிப் போராட நேர்கிறது என்கிற ஒற்றைக் கோடுதான் கதையின் ஒற்றை வரியும். […]

Read More

கிம்பல் என்ற புதிய ஒளிப்பதிவு நுட்பத்தில் உருவான பரியேறும் பெருமாள்

by on September 25, 2018 0

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’ .செப்டம்பர் 28 படம் வெளியாகும் இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பையும் ‘கிம்பல்’ என்ற தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பம் மற்றும் படத்தைப் பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகிறார்… “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கைபற்றி […]

Read More