August 31, 2025
  • August 31, 2025
Breaking News
January 20, 2020

வைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ

By 0 847 Views

சுதா கோங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூரரைப்போற்று’ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பது தெரிந்த விஷயம்.

சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிப்பதும் இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளதும் கூட அறிந்த விஷயங்கள்தான்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் அமைத்திருக்கும் இசை மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ‘மாறா’ என்ற தீம்பாடல் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டு சூர்யா பாடும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அறிவு எழுதியுள்ள இப்பாடல் வைரல் ஆகி வருகிறது.