August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ
August 5, 2020

நான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ

By 0 664 Views

50 ஆயிரம் பாடல்களுக்குகு மேல் பாடி சாதனை படைத்த தமிழ் பட உலகின் முடிசூடா பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும் அது குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் முழுமையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாகவும் சில நாட்களில் குணம் பெற்று வீட்டுக்கு திரும்பி விடுவேன் என்றும் நம்பிக்கையுடன் அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன் தனது நலம் விரும்பிகள் கவலைப்பட்டு தன்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அந்த வீடியோ கீழே…