தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் விபரம்… அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சியை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்குக் காரில் புறப்பட்டு சென்றார். வழியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அப்போது […]
Read Moreலண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற நிலையில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் கெர்பரின் கை ஓங்கியே இருந்தது. அதிரடியாக விளையாடிய கெர்பரின் ஆட்டத்துக்கு செரினா வில்லியம்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கெர்பர் கைப்பற்றினார். […]
Read Moreஇன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம் ஐந்து பெண்பிள்ளைகளை மகள்களாக அடைந்த சத்யராஜின் ஆண்வாரிசு அடையும் முயற்சி கடைசியாக வெற்றி பெற அப்படி அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து […]
Read Moreவிஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விஜய் […]
Read More