December 2, 2025
  • December 2, 2025

Simple

மனைவி ரஜினியைப் பிரிந்தார் விஷ்ணு விஷால்

by on November 13, 2018 0

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னகென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடித்த ‘ராட்சசன்’ பெரிய வெற்றியைப் பெற்றது. ஏழு வருடங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியைக் காதலித்து மணம் புரிந்தார் அவர். அவர்களுக்கு ஆர்யா என்ற மகன் இருக்கிறான். இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஒருவருடமாக மனைவியைப் பிரிந்திருந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார். மனமொத்து இந்த முடிவை மேற்கொண்டதால் இருவரும் […]

Read More

இந்தியன் 2 ல் கமலுடன் நடிக்க சிம்புவுக்கு ஷங்கர் அழைப்பு

by on November 13, 2018 0

2பாய்ண்ட்O படம் வெளியீட்டுக்கு வந்து விட்டதால் இனி அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 ல் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதில் கமல் நடிக்க, அவருடன் நடிக்கவிருக்கும் நடிக நடிகையரின் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி ஒரு கேரக்டரில் துல்கர் சல்மான் நடிப்பார் என்பது தெரிகிறது. கமலுடன் முக்கியக் கேரக்டரில் நடிக்க சிம்புவை அழைத்திருக்கிறார் ஷங்கர் என்கிறார்கள். ஏற்கனவே ஒருமுறை ‘நண்பன்’ படத்தில் நடிக்க சிம்புவை ஷங்கர் அழைக்க அவர் நடிக்க முடியாதது தெரிந்த விஷயம். […]

Read More

கோடையை குளிர்விக்க ஓவியா வேதிகாவுடன் வருகிறார் ராகவா லாரன்ஸ்

by on November 13, 2018 0

ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் சினிமாவில் ஒரு படத்தின் நான்காவது பாகத்தையும், இன்னொரு படத்தின் மூன்றாவது பாகத்தையும் இணைத்து இந்தக் கோடை விடுமுறைக்குக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். கோடை விடுமுறையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட இந்தப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இளசுகளுக்காக படத்தில் இருக்கவே இருக்கீறார்கள் ஓவியாவும், வேதிகாவும். ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படம்தான் அது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் […]

Read More

சௌந்தர்யா ரஜினிக்கு மீண்டும் டும்… டும்… டும்..!

by on November 12, 2018 0

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்குத் திருமணமாகி விவாகரத்தான கதை எல்லோருக்குமே தெரியும். அதன்பிறகு அவர் தானுண்டு, தன் சினிமா முயற்சிகளுண்டு என்று இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மனதை ஒரு இளைஞர் கவர, அது காதலாகிக் கசிந்து ரஜினி காதுக்குப் போக, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், இந்த முறை தடபுடலாக இல்லாமல் சிம்பிளாக இந்தத் திருமணம் நடக்குமாம். சௌந்தர்யாவின் மனம் கவர்ந்தவர் வேறு யாருமல்ல. ‘வஞ்சகர் உலகம்’ படம் பார்த்தவர்களுக்கு அதில் இரண்டாவது ஹீரோவாக வந்த விசாகனைத் […]

Read More

போலீஸ் தேடும் இந்த விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க…

by on November 12, 2018 0

இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள். சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் […]

Read More