July 4, 2025
  • July 4, 2025
Breaking News
December 28, 2018

2 மணிநேரத்தில் சாதனை – பேட்ட டிரைலர் விமர்சனம்

By 0 1096 Views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிட ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்குதான் வெளியிடப்பட்டது. 

ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் கிடைப்பதே சாதனையாக இருக்க, இந்த டிரைலர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாளில் எல்லா சாதனைகளையும் மிஞ்சினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வழக்கத்தைவிட அதிகமான துள்ளலுடன் ரஜினி நடித்திருப்பதே இந்த பேட்ட கவர்வதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. அத்துடன் கடந்த படங்களில் அவரை வித்தியாசமாகக் காட்ட அவரது வழக்கமான ஸ்டைல் விஷய்ங்களைக் குறைத்துக் காட்டியிருந்தார்கள். 

இதில் அப்படியில்லாமல் ரஜினியை ரஜினி அஸ்டைலுடனே பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அனிருத் இசையில், திரு ஒளிப்பதிவில் அமைந்த ‘பேட்ட’ பொங்கல் விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.