January 29, 2026
  • January 29, 2026

Simple

விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் – பேட்ட விழாவில் ரஜினி

by on December 9, 2018 0

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படத்தில் ரஜினியுடன் நடித்த சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசியதிலிருந்து… “கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு அரசாங்கத்தால் […]

Read More

ஹன்சிகா 50வது படத்துக்கு வரப்போகிறது ஆப்பு

by on December 9, 2018 0

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு ஹீரோவே 50வது படத்தை முடிப்பது இமாலய சாதனை என்றிருக்க, ஒரு நடிகை 50வது படத்தில் நடிப்பது ஆகப் பெருமைதான். அந்த பெருமைக்குரிய நடிகை ஹன்சிகா மோத்வானி. அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்ததாலும், பல மொழிப்படங்களில் நடிப்பதாலும் இது சாத்தியப்பட்டது எனலாம். அவரது பொன்விழாப்படமாக அமைவது ‘மஹா’ என்கிற படம். ‘எட்சட்ரா’ வி.மதியழகன் தயாரிப்பில் யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்தப்படத்தில் ஹன்சிகா முதன்மைப்பாத்திரம் ஏற்கிறார். நயன்தாரா வழியில் அவரே படத்தின் நாயகன், நாயகி எல்லாமும். அதில் […]

Read More

நிஜ நோயாளி ஹீரோவான படத்தை தேனாண்டாள் வெளியிடுகிறது

by on December 9, 2018 0

இந்தப்படத்தின் கதையைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம். நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவரக்ளது வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது. கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய். Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயராம். அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய் என்றிருக்க அதைக் குணப்படுத்தும் அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் பிடிப்பதோடு இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் […]

Read More

சுரேஷ் மேனனின் கர்மா நமக்கு வருமானம் தருமாம்

by on December 8, 2018 0

ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக சுரேஷ் (சந்திர) மேனனை நாம் அறிவோம். ஆனால், அவருக்கு வெளியே தெரியாத பல முகங்கள் உண்டு. அதில் ஒரு முகம் புதிய ‘ஆப்’ உருவாக்கியிருப்பது. இப்போது அவர் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார். நான் 40 வருடமாக சினிமா துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், […]

Read More

பா.இரஞ்சித் களமிறக்கும் இரண்டாவது குண்டு

by on December 8, 2018 0

இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு தன் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றித் திரைப்படமாக அமைந்ததி ல் மட்டற்ற மகிழ்ச்சி. விமர்சகர்களும் கொண்டாடிய அந்தப் படத்தைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸின் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறார் பா.இரஞ்சித். தலைப்பே மிரட்டலாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ‘அதியன் ஆதிரை’ என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக […]

Read More