தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தவிருக்கும் மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதைத் தொடர்ந்து டிக்கெட் விற்பனை ‘புக் மை ஷோ’ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பிரமாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. […]
Read Moreகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகிகளாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். […]
Read Moreவிஷால் தன் திருமண செய்தி உண்மைதான் என்று அறிவித்தாலும் அறிவித்தார். மீடியாக்களும், சமூக வலைதளங்களும் சுதாரித்து விட்டன. இரண்டு நாள்களாக செய்திகளில் விஷால் மணக்கப்போகும் பெண் இவர்தான் என்று ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் விஷால். அவரது மக்கள் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் ‘விஷாலின் மணமகள்’ என்று வெளி வந்து பரவி கொண்டிருக்கும் செய்தி […]
Read Moreமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் நடத்தப்பட்டது. அவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் […]
Read More