November 13, 2025
  • November 13, 2025

Simple

கம்பி கட்ன கதை திரைப்பட விமர்சனம்

by on October 16, 2025 0

அவர்களே இது ‘கம்பி கட்ன கதை’ என்று சொல்லிவிட்டதால் இதற்கு மேல் நாம் இதை “காதில் பூ சுற்றும் கதை…” என்றோ “எப்படி கம்பி கட்டி இருக்கிறார்கள்..?” என்றோ சொல்வதற்கு ஏதுமில்லை. படத்தின் லைனே ஒரு கம்பிதான். உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார் இல்லையா..? அந்த லைனைப் பிடித்துக் கொண்டு அதே வைரத்துடன் இன்னொரு வைரத்தையும் மகாராணிக்கு பரிசளித்த அந்த வெள்ளைக்காரர் திருடினார் என்றும், ஒன்றை மகாராணிக்குத் தந்துவிட்டு இன்னொன்றை […]

Read More

எரிபொருளின் பின்னால் இருக்கும் மாஃபியா பற்றிய கதைதான் டீசல்..! – ஹரிஷ் கல்யாண்

by on October 15, 2025 0

‘டீசல்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், “‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல […]

Read More

கேம் ஆஃப் லோன்ஸ் (Game of Loans) திரைப்பட விமர்சனம்

by on October 14, 2025 0

ஒரே ஒரு வீடு, நான்கே பாத்திரங்கள் – இதை வைத்து சமூகத்துக்கு ஒரு செய்தியுடன் நீட்டான ஒருபடத்தைக் கொடுக்க முடியுமா? ‘முடியும் ‘ என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அபிஷேக் லெஸ்லி. அப்படி என்ன கதை என்கிறீர்களா? இன்றைக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கை எல்லாத் தேவைகளுக்கும் லோன் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது.  ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி அதற்காகப் பல இடங்களில் கடன் […]

Read More

“டியூட் இயக்குனர் கீர்த்தியை என் தம்பியாகவே நினைக்கிறேன்..!” – பிரதீப் ரங்கநாதன்

by on October 14, 2025 0

’டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில்  நடைபெற்றது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, “மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்த படத்தில் அறிமுகமாகும் […]

Read More

ராஜா வீட்டு கன்னு குட்டி திரைப்பட விமர்சனம்

by on October 11, 2025 0

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அப்படி நாயகனுக்கு முத்தத்துடன் நேர்ந்த முதல் காதல் அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை.  குடும்பமே சிங்கப்பூரில் செட்டில் ஆகி செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். வந்தவுடன் நேராக சிதிலமடைந்த ஒரு வீட்டைப் போய் பார்க்கையில் நமக்கே புரிந்து போகிறது அது அவருடைய காதலியின் வீடு என்று.  அவள் வேறு இடத்தில் திருமணம் ஆகிப் போய் விட, […]

Read More

எழுத்தாளர் அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி..! – மைலாஞ்சி விழாவில் சீமான்

by on October 11, 2025 0

சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு..! அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் […]

Read More