வட சென்னையில் வஞ்சக முகங்களைத் திரையில் காட்டிய வெற்றிமாறன் அடுத்த முயற்சியாக நெல்லைச் சீமைக்குப் பயணப்பட்டு நெகிழ வைக்கும் கதை ஒன்றைச் சொல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். அதற்கு உந்து சக்தியாக பூமணி எழுதிய ‘வெக்கை’ புதினமும், உறுதுணையாக தனுஷும், ஆதாரமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் இருந்திருக்கிறார்கள். தனுஷ் ஏற்றிருக்கும் சிவசாமி என்கிற நடுத்தர வயதுடைய, சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மனிதனின் கதையை ரத்தமும், கண்ணீரும் தெறிக்கச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். பஞ்சமி நில மீட்பு காலத்தில் தொடங்கித் தொடர்கிற […]
Read Moreநடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்ற தன் 100வது படத்தில்தான் ஒன்பது வேடங்களில் வந்து அசத்தினார். அதேபோல் அவரது நடிப்பு வாரிசாகக் கருதப்படும் கமல் ஹாசன் அந்த வேட எண்ணிக்கையில் ஒன்றாவது கூட்டி நடிக்க வேண்டுமென்ற ஆவலில் தன் ‘தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் நடித்தார். அவை இரண்டுமே சாதனைப் படங்களாக இன்றளவும் கருதப்படுகின்றன. இப்போது அவர்கள் இருவரையும் மிஞ்சி விட்டார் யோகிபாபு என்றால் தமிழ்சினிமா ரசிகர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள். ஆனால், அப்படி […]
Read Moreவேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் ‘பப்பி. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பப்பி’ படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே ‘பப்பி’. அக்டோபர் 11ம் தேதி […]
Read Moreவிஜய் 64 படம் சென்னை பிலிம் சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்கும் இந்நேரத்தில் அதற்கு முந்தைய வெளியீடாக இருக்கும் ‘பிகில்’ குறிப்பிட்ட நாளில் வெளிவருமா என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது. கடந்த ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின்போதும் படம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அது தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘பிகில்’ படத்திலும் தொடர்கிறது. பின்னணியில் இருப்பது அரசியலேதான். ரஜினி தன் ஒவ்வொரு படத்தின்போதும் அரசியல் அஸ்திரத்தைக் கையிலெடுத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் தந்திரத்தை […]
Read Moreஅனைவருக்கும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்ததின நல் வாழ்த்துகள்..! அ.பாலகிருச்ணன் இயக்கி வரும் ‘வெல்கம் பேக் காந்தி’ படச் செய்தியை இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலம், இந்தியில் உருவாகும் இப்படத்தினை ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். ‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் […]
Read More