பெண்கள் ஜாக்கெட் அணிய கூடாது என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் ஜாக்கெட் அணிந்து கொள் என்றால் அப்படி அணிய மாட்டேன் என்று சொல்கிற ஒரு வித்தியாசமான பெண்ணின் கதை இது. ஆக… அணியக்கூடாது என்றாலும் அணிந்து கொள் என்றாலும் அது பெண்ணின் சுதந்திரத்தைக் குறைப்பதாகவே இருக்கிறது. இதில் இந்த கதை நாயகி அங்கம்மாள் எடுக்க முடிவு என்ன என்பதே கதை. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி கதையை ஒட்டி படைக்கப்பட்ட இந்த நவீனத்தை விபின் […]
Read Moreகாதல் படுத்தும் பாடு, காதலிக்கு வேறு இடத்தில் கல்யாணம் ஆகியும் காதலர்களைத் துரத்துகிறது. கிர்த்தி சனோன் மீதான காதலுக்காக குணம் மாறி, கொள்கை மாறி உயர் படிப்பெல்லாம் படித்தும் காதல் கை கூடாமல் போகும் தனுஷ் இந்திய விமானப்படையில் பைலட் ஆகிறார். அங்கே அவர் செய்த சிறு பிழை அவரை மீண்டும் தன்னை நிரூபிக்க வைக்க, அந்தப் புள்ளியில் கடந்த காலக் காதல் மீண்டும் துரத்துகிறது. என்ன செய்தார் அவர் என்பதுதான் கதை. தனுஷின் வழக்கப்படியே அடாவடி […]
Read Moreஅடாத மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவிகள்..! 10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி… 100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை… 200 பேருக்கு ரெயின்கோட் … 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்…. டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும் பலரும் கண்ணீரும் கவலையாக இருந்து வருகின்றனர். அவர்களில் தொழிலை இழந்த 10 ஏழைகளுக்கு தொழில் செய்து முன்னேற காய்கறிக்கடை, இட்லி கடை […]
Read Moreதலைப்பைப் பார்த்ததும் கீர்த்தி சுரேஷ் கையில் ஒரு ரிவால்வரை எடுத்துக்கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவார் என்றுதான் எதிர்பார்க்கிறோம். ஆனால் இது ஒரு டார்க் காமெடி வகையறா படம். எனவே கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாகத்தான் வருகிறார். அம்மா ராதிகா, அக்கா, தங்கை என்று நான்கு பெண்கள் மட்டுமே இருக்கும் குடும்பத்துக்குள் அழையா விருந்தாளியாக போதையில் உள்ளே நுழைந்த ரவுடி சூப்பர் சுப்பராயனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிர் தாக்குதல் புரியும் போது […]
Read More‘ கூடா நட்பு கேடாய் முடியும்…’ என்று புரிய வைக்கும் கதை. அதை இயல்பான கதையோட்டத்தில் சொல்லி வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் உடனும் மகனுடனும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த மலை கிராமத்தை நோக்கி கடுமையான பாதையில் நடந்து போகிறார்கள். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் மலை இறங்கி போய் வேலை பார்த்திருந்தாலும் பணம் சம்பாதிக்கும் ஆவலில் தவறான நட்புகள் தந்த பகைமையால் அங்கும் […]
Read Moreஐபிஎல் என்கிற Indian Penal Law என்ன சொல்கிறது என்றால் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே. இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் அதிகார வர்ககம், சாமானிய மக்களை தங்களது சுயலாபத்துக்காக கொடுமைப்படுத்துகிறது என்று சொல்லும் படம். அப்படி கொடுமைக்கார இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் தவறுதலாக ஒரு இளைஞனை பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் அடைக்கிறார். தான் லஞ்சம் வாங்கியதை அவன் படம் பிடித்து விட்டான் என்று நினைத்து அவனது மொபைல் […]
Read More