August 3, 2026
  • August 3, 2026

Simple

தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் – கமல்

by on February 12, 2020 0

சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது: பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன். தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும். தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா எனக் கேட்கிறீா்கள். கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும்

Read More

மாஸ்டர் படத்தின் மலைக்க வைக்கும் வியாபாரம்

by on February 12, 2020 0

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படத்துக்கு தற்போதே வானளவு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழோ இந்தியோ முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட அந்த படத்தின் ரிலீஸ் நெருங்கும்போதுதான் வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் இன்னும் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த ஏரியாவும் வியாபாரமாகி சாதனை படைதது விட்டது என்கிறார்கள். இதன் தமிழக உரிமம் 68 கோடிக்கும் […]

Read More

பறக்கும் விமானத்தில் சூர்யாவுடன் 100 குழந்தைகள்

by on February 12, 2020 0

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் ஒரு பாடல் பறக்கும் விமானத்திலிருந்து நாளை வெளியிடப்படவுள்ளது. பாடலை வெளியிடுவது யார் என்பது குறித்த தகவல் இப்போது கசிந்துள்ளது. படக்குழுவின் திட்டப்படி, சூர்யா மற்றும் 100 குழந்தைகள் விமானத்தில் பறந்து பாடலை வெளியிடுகின்றனர். உடன் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டோரும் இருப்பார்கள் எனத் தெரிகிறது. சூர்யாவுடன் இது வரை நேரில் […]

Read More

சூரரைப் போற்று முன்னே மாஸ்டர் பின்னே

by on February 12, 2020 0

கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள முக்கியமான படங்களில் ஒன்று விஜயின் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது. விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைக் காதலர் தினத்திலிருந்து தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. ‘ஒரு குட்டி கத..’ என்ற முதல் […]

Read More

யோகி பாபுவுக்கு தனுஷின் திருமண பரிசு

by on February 11, 2020 0

யாரும் எதிர்பார்க்காமல்… யாரையும் எதிர்பார்க்காமல் சமீபத்தில் யோகிபாபு ரகசிய திருமணம் செய்து கொண்டார் அல்லவா? திருமணம் ரகசியமாக நடந்து விட்டதால் அதற்கான வரவேற்பை இந்த மாதத்தில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் அவர். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கி தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள திருநெல்வேலி வந்திருந்தார். திருமணம் முடிந்து அவர் வந்ததால் அதைக் கொண்டாடும் விதமாக கேக் ஒன்றுக்கு ஆர்டர் செய்து வைத்திருந்தார்கள். அதனை மாரி […]

Read More