September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்துக்கு யு சான்றிதழ்
March 15, 2020

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்துக்கு யு சான்றிதழ்

By 0 576 Views

குடும்பங்கள் குதூகலத்துடன் கொண்டாடும் படங்களாக காமெடி படங்கள் இருக்கின்றன. அதனால், விநியோகஸ்தர்களும் காமெடி படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். வீரா, மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படம் தலைப்பு முதலாக வெளியிடப்பட்ட சிறு, சிறு வீடியோ புரமோக்களால் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தற்போது CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளதால் படக்குழு பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறது.

இயக்குநர் அவிநாஷ் ஹரிஹரன் படம் குறித்து கூறியதாவது…

“எங்கள் படக்குழு மகிழ்ச்சியில் ஈருக்கும் முதல் காரணம் CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கிள்ளார்கள். அடுத்த காரணம் படக்குழு படத்தை வெளியிட தயாரகி வருகிறது. சமீப காலங்களில் மிக கனமான கதைகளுள்ள, பொருளுள்ள, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்  படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இது எங்களது படத்தை வெளியிட சரியான தருணம் எனும் எண்ணத்தை என்னுள் விதைத்தது.

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல  இதுவே சரியான நேரம். படத்தை மிக தரமானதாக உருவாக்க பெரும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு பெரும் நன்றி. இப்படத்தில் நடிகர்கள் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளார்கள். வீரா, மாளவிகா, பசுபதி முதலான  அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

இப்படத்தின் கதையை ரசிகர்கள் கொண்டாடும் நேரம்,  படம் சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியை பெரிதும் ரசிப்பார்கள். படவெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்..!” என்றார்.

Auraa Cinemas சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை  அவிநாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ளார். மேட்லி ப்ளூஸ் ( Madley Blues ) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். சுதர்ஷன் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். எட்வர்ட் கலைமனி கலை இயக்கம் செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார்.