April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஐடி ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும் – விஜய் உருக்கம்
March 15, 2020

ஐடி ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும் – விஜய் உருக்கம்

By 0 493 Views

ரசிகர்களோ, பத்திரிகையாளர்களோ அழைக்கப்படாத விழாவாக நடந்து முடிந்தது விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா. அதில் நடிகர் விஜய் பேசியதிலிருந்து…

“எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க.

விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு.

ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு.

உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு.

மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அழகான முகம். அவர் உடனே தமிழ் கத்துகிட்டாரு.

நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்.

ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க…

என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு.

நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும்.

ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும்..!”

 

விழாவில் தொகுப்பாளர் விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்டார்..

“20 வருசம் முன்னாடி இருந்த விஜய் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க..?”

“அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி..!”

    •  
    •  
    •  
    •  
    •  
    •