September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • உரியடி விஜயகுமார் ஹீரோ ஆக போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்
March 14, 2020

உரியடி விஜயகுமார் ஹீரோ ஆக போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்

By 0 571 Views

மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.

விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘உரியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைகதை-வசனம் எழுதுகிறார்.

இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார்.

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி இயக்கும் இந்த புதிய படத்தின்
நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.