கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், குட்லக் சகி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி காலை பத்து மணிக்கு […]
Read Moreகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமாகி வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்த டாக்டர் சேதுராமனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு பக்கம் நடிகராகவும் இன்னொரு பக்கம் மருத்துவத்துறையில் தோல் நிபுணராகவும் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கொரோனா ஊரடங்கு நேரத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். வெறும் 36 வயதில் நேர்ந்த அவரது மரணம் கோலிவுட்டில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அவரது மனைவி உமையாள் […]
Read Moreதமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அஇஅதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்து கூறிவருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், “இது அவரவர்களின் சொந்தக் கருத்து என்றும் கட்சியின் கருத்து அல்ல என்றும் கூறினார். எனினும், இது போன்று பொது வெளியில் கருத்துத் தெரிவிப்பது கட்சியைப் பலவீனப்படுத்தும் … ” என்றும் அவர் குறிப்பிட்டார். அஇஅதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலைச் சின்னம் என்ற மூன்று தாரக […]
Read Moreசென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டூரில் உள்ள மிக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயவைத்து நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் நடந்து செல்லும் காட்சியை அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலிஸார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு […]
Read More