September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சுதந்திர தினம் அன்று கீர்த்தி சுரேஷ் நடித்த குட்லக் சகி படத்தின் டீஸர்
August 13, 2020

சுதந்திர தினம் அன்று கீர்த்தி சுரேஷ் நடித்த குட்லக் சகி படத்தின் டீஸர்

By 0 372 Views
கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. 
நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், குட்லக் சகி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். 
ஆகஸ்ட் 15-ம் தேதி காலை பத்து மணிக்கு படத்தின் டீஸர் சுதந்திர தின விசேஷ வெளியீடாக வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் போஸ்டரில் தோற்றமளிக்கிறார். 
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார். 
ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்க சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.