August 5, 2026
  • August 5, 2026

Simple

ஷூட்டிங் விபத்தில் சிக்கி ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்ட முன்னணி மலையாள ஹீரோ

by on October 7, 2020 0

இன்றைய கேரள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் டொவினோ தாமஸ். இவர் தமிழிலும் தனுஷின் மாரி உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கொரோனோ பரவலுக்கு பின்னான படப்பிடிப்பு தொடங்கியதும் இவர் ‘கலா ‘ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  அந்தப் படத்துக்காக இன்று ஒரு சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சுப் பகுதியில் பலமான அடிபட்டது. சற்று நேரம் கழித்து அவரது வயிற்றில் கடுமையான வலி ஏற்படவே […]

Read More

இயக்குனர் சீனு ராமசாமிக்கு நேற்று இன்னொரு திருமணம் செய்துவைத்த ட்விட்டர்

by on October 7, 2020 0

இன்றைக்கு சமூக வலைதளங்கள் உடன் தொடர்பில் இல்லாதவர்களே இருக்க முடியாது. அதிலும் பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலமாகவே தங்கள் தொடர்புகளை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் அவ்வப்போது சிக்கல்களும் வருவதுண்டு. முக்கியமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்து அதில் தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இயக்குனர் சீனு ராமசாமி வைத்திருக்கும் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அவருக்கு நேற்று தான் திருமணம் ஆனதாக பதிவாகி […]

Read More

முதல்வர் வேட்பாளர் யார் என்பது எங்களுக்கும் நாளைதான் தெரியும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

by on October 6, 2020 0

சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ; “திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு க்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டி ருக்கிறது…” என்ற அவர், “கொரோனா […]

Read More

கபடதாரி முதல் பார்வையை சூர்யா வெளியிட்ட ரகசியம்

by on October 6, 2020 0

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு எதிர்பாராத பரிசு வழங்க நினைத்த ‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின்  முதல் பார்வையை இன்று […]

Read More

காஜல் அகர்வாலுக்கு திருமணம் அக்டோபர் 30 ல் நடக்கிறது

by on October 6, 2020 0

காஜல் அகர்வால் இந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தென்னக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் அஜித்-விஜய் இருவருடனும் ஜோடி போட்ட நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.  இந்நிலையில் ஒரு திடீர் அறிவிப்பை செய்து இருக்கிறார் காஜல் அகர்வால். ரசிகர்களுக்கு அந்த செய்தி ஷாக் ஆக இருந்தாலும் அவரைப் பொருத்தவரை அவர் வாழ்வின் இனிமையான தருணம் அது. ஆம்… அவருக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. மணமகன் பெயர் […]

Read More

உயிரிழந்த கணவரின் கட் அவுட்டை வைத்துக்கொண்டு வளைகாப்பு நடத்திய மேக்னா ராஜ்

by on October 5, 2020 0

சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனாவார். குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே, உயிருக்கு உயிராய் காதலித்த நடிகை மேக்னா ராஜை, 2017 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் சிரஞ்சீவி சார்ஜா. வாழ்க்கை, மகிழ்வின் உச்சத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சென்ற ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த போது அவரது காதல் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். காதல் கணவர் சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது, அவரது உடலை மேக்னா […]

Read More