விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது நடிகர் மாரிமுத்து பேசும்போது… “விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கு. விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். […]
Read Moreநடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கிராமத்து நாயகனாக கார்த்தி நடிக்கும் “விருமன்” படத்தை முத்தையா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு உற்சாகமாக உள்ளது. கார்த்தியுடன் அறிமுகமாகும் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். “என் எதிர்த்த […]
Read Moreசிறிது நாட்களுக்கு முன் நடந்த இந்த படத்தின் முன்னோட்ட விழாவில் 40 டைரக்டர்களிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவத்தை சொல்லி எல்லோரிடமும் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார் இந்த படத்தின் நாயகன் அஸ்வின் ( குமார் லஷ்மிகாந்தன்) அவர் சொல்ல வந்தது இந்தப் படத்தின் கதை மட்டும்தான் தூங்காமல் கேட்டது என்பதைத்தான். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நமக்கு தோன்றியது அஸ்வின் எவ்வளவு நாகரிகமானவர் என்று. காரணம் இந்தப்படமும் நம்மைத் தூங்க வைத்ததுதான். அப்படி சொல்லி விடக்கூடாது […]
Read Moreஒரு அரக்கனின் மனதில் தாய்ப்பாசத்தை ஊட்டி அவனுக்கு அன்பின் வலியை உணர்த்தும் படம். இங்கு எடுக்கும் பல படங்களும் ஆங்கிலம், கொரியன் அல்லது இரானிய படங்களின் அப்பட்டமான காப்பிதான் என்றிருக்க, சிலர் மட்டுமே இங்கிருந்து உருவான கதை என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். அப்படி கொரிய மொழிப்படம் ஒன்றின் எடுத்தாளல் இது என்பதைச் சொல்லியே படத்தைத் தொடங்கும் இயக்குநர் ஹரிகுமாரின் மனசாட்சிக்கு முதலில் வந்தனம் சொல்லி விடலாம். கோயம்பேடு சந்தையில் தொடங்கும் படத்தில் காய் கனிகளைத் தாண்டி முக்கியமான […]
Read Moreகொஞ்ச காலமாகவே ஹாலிவுட்டை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் விஷயங்கள் தமிழ் சினிமாவிலும் வியாபித்து இருக்கின்றன. டைம் லூப் எல்லாம் இங்கே எடுபடுமா என்ற தயக்கததை மாநாடு வெற்றி துடைத்து எறிந்தது. ஆனால் இது அதற்கும் முன்பு திட்டமிடப்பட்ட படமோ என்னவோ, டைம் லூப் என்று கமிட் செய்து கொள்ளாமல் நாயகன் காண்கிற கனவு எல்லாம் அப்படியே நடக்கும் என்ற நிலையில் அதை சரி செய்து கொள்ள முயலும் அவரது போராட்டமும் தான் கதை. போலீசாக […]
Read Moreபொங்கலுக்கு ஒரு கிராமத்துப் படம் வராவிட்டால் எப்படி என்று வந்திருக்கும் படம். இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை. நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார் பட பார்முலாவாக இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதில் சம்பந்தமில்லாமல் துருத்தலாக பெரியாரிஸமும் உள்ளே வந்திருக்கிறது. இது சாதிப்படமில்லை என்பதற்காக பெரியாரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டுவந்தாலும் படத்துக்குள் […]
Read More