February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அமெரிக்காவில் டிவி ஐரோப்பாவில் இசை தமிழில் படம்-ஸ்ருதிஹாசன் ஷெட்யூல்
June 21, 2019

அமெரிக்காவில் டிவி ஐரோப்பாவில் இசை தமிழில் படம்-ஸ்ருதிஹாசன் ஷெட்யூல்

By 0 713 Views

‘யூஎஸ்ஏ’ என்னும் பிரபல அமெரிக்க நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை ஸ்ருதி ஹாசன் பெற்றுள்ளார். அதன் மூலம் அவர் ‘டிரெட்ஸ்டோன் ‘என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சிஐஏ வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் ‘பிளாக் ஆப்ஸ்’ புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக , திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர்.

இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாபாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .

Shruthi Haasan

Shruthi Haasan

இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய ‘டிம் கிரிங்’ என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல் உலக அளவில் இசையிலும் தனது அழுத்தமான பதிவை இட லண்டனில் இசைக்குப் பெயர் பெற்ற பல மேடைகளிலும், சபைகளிலும் அவர் பாடியுள்ளார். தற்போது அவருடைய முதல் இசை ஆல்பத்தை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

மேலும் தமிழ்படத்தைப் பொறுத்த வரையில் ஸ்ருதிஹாசன் தற்போது ‘லாபம்’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

எங்கே எது கிடைத்தாலும் ‘லாபம்’தான்..!